Sunday, December 11, 2011

உர நிர்வாகம் - உரமிடும் முறைகள்

உரமிடுதல் முறைகள்

உரமிடுதல் முறைகள்
பலவகையான உரமிடுதல் முறைகள் உள்ளன. அவை:

அ) தெளிப்பு முறை:
1. வயலின் அனைத்துப் பகுதிகளில் ஒரே மாதிரியாக உரங்களை தெளிப்பதாகும்
2. அடர்த்தியாக செடிகள் உள்ள பயிர்களுக்கு, மண்ணில் நன்றாக வேருன்றிய பயிர்களுக்கும், இந்த முறை ஏற்றது. இதன் மூலம் அதிகளவிலான உரங்களை அளிக்கலாம். கரையாத பாஸ்பரஸ் உரங்களான ராக் பாஸ்பேட்டை இந்த முறை மூலம் தெளிக்கலாம்

Method of Fertilizer

உரங்களைத் தெளிப்பதால் இரண்டு வகைகள் உள்ளன

  • அடிஉரமிடுதல்
  • விதைக்கும் பொழுது அல்லது பயிரிடும்போது தெளித்தல் (அடிஉரமிடுதல்) உரங்களை ஒரே மாதிரியாக வயலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுமாறு தெளித்து மண்ணுடன் கலப்பதே உரங்களை விதைக்கும் பொழுது தெளிப்பதன் நோக்கமாகும்

  • மேலுரமிடுதல்
  • வளரும் பயிர்களுக்கு உடனடியாக பெறக் கூடிய வகையில் தெளிப்பதே இதன் நோக்கமாகும். குறிப்பாக நெருக்கமாக பயிரிடும் பயிர்களான நெல், கோதுமையில் இந்த முறை நல்ல பயனைத் தரும்.

தெளிப்பு முறையின் தீமைகள்

  • பயிர்களின் வேர்கள் முழுவதுமாக உரங்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை
  • வயலில் களைச் செடிகள் வளர்வதை ஊக்குவிக்கிறது.
  • ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலையாக உள்ளன. இதனால் பயிர்களால் எளிதில் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

குறித்த இடத்தில் உரமிடுதல்

  • விதை இருக்கும் இடத்தை பொறுத்தோ அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட இடத்திலோ உரங்களை இடும் முறையாகும்
  • உரங்களை இடும் அளவு குறையும் பொழுதும், வேர் வளர்ச்சி நன்றாக இல்லாத இடத்திலும், வளமில்லாத மண்ணிலும் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் சாம்பல் மற்றும் மணிச் சத்துக்களை இடலாம்.

பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள்
உழு சால் வழி உரமிடுதல்

  • உழவு சாலின் அடிப்பகுதியில் உரத்தை இட்டு, உழவு செய்யும் போது தொடர்ந்து உரமிடப்படுகிறது
  • ஒவ்வொரு வட்டத்தையும் முடித்து விட்டு அடுத்த சாலுக்கு போக வேண்டும்.
  • இந்த முறை மண் எங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை உலர்ந்து, கெட்டியான மண் கட்டியாக வருகிறதோ அங்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆழமாக உரமிடுதல்

  • நெல் வயல்களில் அம்மோனியா நைட்ரஜன் பயிர்களுக்கு கிடைக்காமல் அப்படியே இருக்கிறதோ, அங்கு இந்த முறையில் உரமிடப்படுகிறது. இதனால் ஒரே மாதிரியாக வேர்ப் பகுதியின் அருகில் கிடைக்குமாறு செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதியில் உரமிடுதல்
விதைக்கு அல்லது பயிருக்கு அருகில் உரங்களை அளிப்பதால், வளரும் பயிர்களின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுகிறது.
பொதுவாக பின்பற்றப்படும் முறைகள்

துளை உரமிடுதல்

  • விதைக்கும் சமயத்தில் விதை உர தெளிப்புக் கருவியின் மூலம் உரங்கள் இடப்படுகிறது. இதனால் உரங்களும், விதையும் ஒரே வரிசையில், வெவ்வேறு ஆழத்தில் இடப்படுகின்றன. இந்த முறை சாம்பல், மணிச் சத்துக்களை தானியம் பயிர்களுக்கு அளிப்பதற்கு ஏற்றதாக இருந்தாலும், விதை முளைப்புத் திறன் குறையும் சில சமயங்களில் இளம் செடிகள் அதிகளவு உரங்களினால் மடிந்து விடுகின்றன

பக்கவாட்டில் உரமிடுதல்

  • பயிரின் நடுவே உள்ள வரிசைகளில் உரமிடப்படுகின்றன.

பொதுவான முறைகள்

  • கையில் உரமிடுதல், மக்காச்சோளம், கரும்பு, பருத்தி மற்றும் இதர பயிர்களில் கூடுதலாக தழைச்சத்து வளரும் பயிர்களுக்கு தரப்படுகின்றன
  • மரங்களைச் சுற்றி உரமிடுதல். மா, ஆப்பிள், திராட்சை, பப்பாளி மற்றும் இதர மரங்களில் இந்த முறையில் உரமிடப்படுகிறது.

வேரைச் சுற்றி உரமிடுதல்
உரங்களை வேரைச்சுற்றி இடுதலாகும். இதில் 2 முறைகள் உள்ளன.
குன்றின் மீது உரமிடுதல்

  • பழத்தோட்டங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் பயிரைச் சுற்றி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் உரமிட வேண்டும். வளையத்தின் நீளம் மற்றும் ஆழம் பயிர்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது

வரிசை உரமிடுதல்
கரும்பு, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், தானியங்கள் போன்ற பல பயிர்களில் வரிசையில் விதைக்கும் போது, உரங்களை தொடர்ந்து வளையங்களாக வரிசையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் இடவேண்டும்.
சிறு வில்லைகளாக உரமிடுதல்

  • தழைச்சத்து உரங்களை 2.5 - 50 செ.மீ ஆழத்தில் நெற்பயிரின் வரிசைகளின் நடுவில் சிறு வில்லைகளாக இட வேண்டும்
  • உரங்களை மண்ணுடன் 1:10 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். நெல் வயல்களில் தேவையான அளவுகளில் சிறு வில்லைகளாக மண்ணுடன் சேர்த்து இட வேண்டும்
Row Placement

நன்மைகள் மற்றும் தீமைகள்

  • இந்த முறையால் மண்ணுடன் குறைந்த அளவு தொடர்பே உள்ளது. அதனால் ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலைபடுவது குறைகிறது
  • வயலின் அனைத்துப் பகுதிகளிலும் களைகள் இருப்பதால், உரங்களை பயன்படுத்த முடியாது
  • உரங்களின் படிவு அதிகமாக இருக்கும்
  • பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படும் உரங்களின் அளவு அதிகம்
  • தழைச்சத்து இழப்பு குறைகிறது
  • சாம்பல் சத்து ஓரளவு இந்த முறையில் இடப்படுகிறது

Agriculture Nutrient

துவக்கக் கரைசல்

  • தழை, மணி, சாம்பல் சத்துக் கரைசல் 1 : 2 : 1 மற்றும் 1 : 1 : 2 என்ற விகிதத்தில் நடவு செய்யும் சமயத்தில் குறிப்பாக காய்கறிப் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
  • பயிர்களின் துரித வளர்ச்சி மற்றும் விரைவான நாற்றுக்களின் வளர்ச்சிக்கு இந்த கரைசல் உதவுகிறது.

தீமைகள்

  • கூடுதல் வேலையாட்கள் தேவைப்படுகிறது.
  • சாம்பல் சத்து நிலைப்படுத்துவது அதிகளவில் உள்ளது.

தழைத் தெளிப்பு

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கலந்த கரைசலை வளரும் பயிர்களின் தழைகளின் மீது தெளிக்க வேண்டும்.
  • நீரில் கரையும் போது பல ஊட்டங்கள் எளிதாக இலைகளில் உறிஞ்சப்படுகிறது.
  • கரைசலின் அடர்த்தியை கட்டுப்படுத்தலாம், இல்லையென்றால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் இலைகள் எரிந்தது போல தோற்றமளிக்கும்.
  • நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, தாமிரம், போரான், துத்தநாகம், மாங்கனீசு சத்துக்களை இந்த முறையில் அளிக்கலாம். சில சமயங்களில் பூச்சிக் கொள்ளிகளைக் கூட உரங்களுடன் கலந்து அளிக்கலாம்.

உரபாசனம்

  • உரபாசனம் என்பது நீரில் கரையக் கூடிய உரங்களை பாசன நீருடன் வழியாக அளித்தல் ஆகும்.
  • ஊட்டச்சத்துகள் மண்ணிற்குள் கரைசல் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
  • பொதுவாக தழைச்சத்து உரங்களை பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.

உட்செலுத்துதல்

  • நீர்ம உரங்களை மண்ணினுள் அழுத்தத்துடன் அல்லது அழுத்தம் இல்லாமல் உட் செலுத்த வேண்டும்.
  • அழுத்தமில்லாத கரைசல்கள் மண்ணின் மேற்பரப்பு மீதோ அல்லது உழுசாலிலோ ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாமல் அளிக்கலாம்.
  • அன்ஹைடரஸ் அம்மோனியாவை குறுகலான சாலில் 12 – 15 செ.மீ ஆழத்தில் வைத்து, உடனடியாக மூடிவிட வேண்டும். இதனால் அம்மோனியா இழப்பு ஏற்படாது.
Nutrient Management

வான் வழி தெளிப்பு
மண்ணில் உரங்களை அளிக்க முடியாத சூழ்நிலையில் உரக் கரைசலை வானூர்தி வழியாக குறிப்பாக மலைப்பகுதிகளில், காடுகளில், புல்வெளிகளில், கரும்பு வயல்களில் இந்த முறை மூலம் தெளிக்கலாம்.

உரங்கள் பற்றிய முழு விவரங்கள்

உரங்கள்

உரங்கள் என்பது இயற்கை அல்லது செயற்கை மூலங்களிலிருந்து வரக்கூடிய எந்தப் பொருளையும் மண்ணில் சேர்த்து, பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகும்.


உரங்களின் வகைப்பாடு


  1. நேரடி உரங்கள்: ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கிறது
  2. கூட்டு உரங்கள்: 2 அல்லது 3 ஊட்டச்சத்துக்களை முக்கியமாக 2 முக்கிய ஊட்டங்களை வேதியியல் கலவையுடன் கொண்டது. இந்த உரங்கள் துகள்கள் வடிவத்தில் பொதுவாக உற்பத்தி செய்யப்படுகிறது

உதாரணம்: டைஅமோனியம் பாஸ்பேட், நைட்ரோபாஸ்பேட், அம்மோனியம் பாஸ்பேட்

  1. கலவை உரங்கள்: நேரடி உரங்களின் இயல் நிலை கலவையே கலவை உரங்களாகும். இதில் 2 அல்லது 3 முக்கிய ஊட்டச் சத்துக்கள் இருக்கும். கலவை உரங்களை நன்றாகக் கையால் அல்லது இயந்திரத்தால் கலக்க வேண்டும் உரங்களை மேலும் இயல்நிலைத் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தலாம்.
  2. திட உரங்கள்
  3. நீர்ம உரங்கள்

Nutrient Management

திட உரங்கள் பல வடிவங்களில் இருக்கும், முறையே

  • பொடி (ஒற்றை சூப்பர் பாஸ்பேட்)
  • படிகம் (அம்மோனியம் பாஸ்பேட்)
  • சிறு கட்டிகள் (யூரியா, டைஅமோனியம் பாஸ்பேட், சூப்பர் பாஸ்பேட்)
  • சிறு துகள்கள் (ஹோலாண்டு உருண்டைகள்)
  • பெரிய துகள்கள் (யூரியா பெரிய துகள்கள்)
  • பிரிக்யூட் (யூரியா ப்ரிக்யூட்)

யூரியா கட்டிகள் யூரியா சிறு துகள்கள் அம்மோனியம் சல்பேட்
நீர்ம உரங்கள்:

  • நீர்ம உரங்கள் பாசன நீருடன் அல்லது நேரடி தெளிப்பாக அளிக்கப்படுகிறது.
  • பயன்படுத்துவது எளிது, ஆட்கள் தேவை குறைவு, களைக்கொல்லிகளுடன் கலக்கும் வகையில் உள்ளது. இதனால் விவசாயிகளால் பெரிதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

Nutrient Management
Nutrient Management

தழைச்சத்து உரங்கள்:

  • தழைச்சத்து பற்றாக்குறை முதன்முதலில் மண்ணில் தோன்றுகிறது மற்றும் பயிர்களும் தழைச்சத்து உரத்தை மற்ற சத்துக்களை விட அதிகளவில் எடுத்துக் கொள்கிறது. இதனால் தழைச்சத்து உரங்கள் உரங்களிலேயே முதல் இடத்தை வகிக்கிறது
  • 80%க்கு மேலான உரங்கள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அவை நைட்ரஜன் உரங்களாக முக்கியமாக யூரியாவாக தயாரிக்கப்படுகின்றன
  • இது பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது மற்றும் பொருளாதார உற்பத்தி கணக்கிட முடியாத வகையில் உள்ளது

தழைச்சத்து உரங்களை மேலும் பிரிக்கலாம். அவையாவன:
அம்மோனியா உரங்கள்

  • அம்மோனியா உரங்கள் தழைச்சத்தை அம்மோனியம் அல்லது அம்மோனியா வடிவத்தில் வைத்திருக்கும்
  • நீரில் எளிதில் கரையக்கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாக கிடைக்கப் பெறும் நிலையில் உள்ளது
  • நெல்லைத் தவிர, மற்ற எல்லாப் பயிர்களும் தழைச்சத்தை நைட்ரேட் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும். இந்த உரங்கள் கரைவதால் ஏற்படும் இழப்பை எதிர் கொள்ளக் கூடியது, அம்மோனியம் அயனிகள் மண்ணில் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும் நிலையில் இருக்கும்

அம்மோனியம் சல்பேட் C(NH4)2SO4

  • இது ஒரு வெள்ளை உப்பு, நீரில் நன்றாகக் கரையும். இதில் 20.6% நைட்ரஜன், 24.0% கந்தகமும் உள்ளது
  • நெல் மற்றும் சணல் சாகுபடியில் இதன் பயன்பாடு நன்மை அளிக்கக் கூடியதாக உள்ளது
  • பயன்படுத்துவது எளிது, உலர் நிலையில் சேமித்து வைக்கலாம். மழைக் காலத்தில் சில சமயங்களில் கட்டிகள் உண்டாகும்
  • விதைப்பதற்கு முன், விதைக்கும் சமயத்தில் அல்லது மேலுரமாக பயிர்களுக்கு அளிக்க வேண்டும்

Ammonium Sulphate

அம்மோனியம் குளோரைடு (NH4Cl)

  • இது ஒரு வெள்ளை உப்பு இதில் 26.0% நைட்ரஜன் உள்ளது
  • தக்காளி, புகையிலை மற்றும் சில பயிர்களுக்கு இந்த உரங்கள் தாக்கம் ஏற்படுத்துவதால் பரிந்துரைக்கப்படுவதில்லை

Ammonium Chloride

அன்ஹைடரஸ் அம்மோனியா (NH4 )

  • நிறமற்றது மற்றும் நெடியுடையது. இதில் 82.0% நைட்ரஜன் உள்ளது
  • மலிவானது மண்ணில் நேரடியாகவும், குழாய்கள் வழியாகவும் அளிக்கப்படுகின்றன
  • சாதகமான தட்பவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவமாக மாறிவிடும்

நைட்ரேட் உரங்கள்:

  • நைட்ரேட் வடிவத்தில் நைட்ரஜன் இதில் இருக்கும்
  • நைட்ரஜன் அயன்கள் நீரில் கரைந்து ஓடிவிடும். ஏனென்றால் இந்த நைட்ரேட் அயனிகள் மிக எளிதாக மண்ணில் நகரும்
  • தொடர்ந்து இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் மண்ணின் அமிலத்தன்மை குறையும். இந்த உரங்கள் அடிப்படையிலேயே மண்ணில் படியும் தன்மை கொண்டது

சோடியம் நைட்ரேட் (NaNO3)

  • இது ஒரு வெள்ளை உப்பு. இதில் 15.6% தழைச்சத்து உள்ளது
  • நீரில் முழுவதுமாக கரையும். பயிர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் உள்ளது. மண்ணில் எந்த விதமான வேதியியல் மாற்றமும் ஏற்படுத்தாது
  • அரிப்பு ஓட்டம் மற்றும் நைட்ரஜன் குறைப்பால் எளிதாக இழப்பு ஏற்படுகிறது
  • அதிகளவிலான சோடியம் நைட்ரேட் வருடா வருடம் அளிப்பதால் நைட்ரேட் அயனிகள் பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சோடியம் அயனிகள் மண்ணில் அதிகளிவில் சேர்த்து மண்ணின் அமைப்பை தாக்குகிறது. சோடியம் நைட்ரேட்டை சிலி சால்ட் பீட்டர் அல்லது கைலேன் நைட்ரேட் என்றும் அழைக்கப்படுகிறது
  • சோடியம் நைட்ரேட் குறிப்பாக அமில மண்ணிற்கு பயனுள்ளதாக உள்ளது

கால்சியம் நைட்ரேட் (Ca(NO3)2:

  • வெள்ளை நிறத்தில் படிக வடிவில் நீர் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும். 15.5% தழைச்சத்து, 19.5% கால்சியம் இதில் உள்ளது
  • மண்ணின் கார அமிலத்தன்மை சரிசமமாக வைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது

கால்சியம் நைட்ரேட்
பொட்டாசியம் நைட்ரேட் (KNO3):

  • 13.0 சதவீத நைட்ரஜன், 36.4 சதவீதம் பொட்டாசியம் இதில் உள்ளது
  • சோடியம் நைட்ரேட் போலவே இயல்புகளும், பயன்களும் இதில் உள்ளது

Calcium Nitrate

அம்மோனியா மற்றும் நைட்ரேட் உரங்கள்
இதில் அம்மோனியா மற்றும் நைட்ரேட் உள்ளது. இந்த உரங்கள் பயிர்களால் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் (NH4NO3)

  • வெள்ளை நிறத்தில் நீரில் கரைய கூடியதாக நீர் ஈர்க்கும் தன்மையுடைய உப்பு இதில் 3 சதவீத நைட்ரஜன் உள்ளது. இதில் பகுதியளவு நைட்ரேட் நைட்ரஜனாகவும், பகுதியளவு அம்மோனியம் வடிவத்திலும் உள்ளது

கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் (CAN)

  • பழுப்பு அல்லது சாம்பல் நிற துகள்களையுடைய உரம்
  • இதில் 26% நைட்ரஜன் உள்ளது
  • இது ஒரு நடுநிலை உப்பு மற்றும் இதை அமில மண்களில் கூட பாதுகாப்பாக அளிக்கலாம்
  • மொத்த நைட்ரஜனில் பகுதியளவு அம்மோனியா வடிவத்திலும், பகுதியளவு நைட்ரேட் வடிவத்திலும் உள்ளது
  • சுண்ணாம்பை சேர்ப்பதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

Calcium Ammonium Nitrate

அம்மோனியம் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் சல்பேட் நைட்ரேட் ((NH4)2SO4NH4NO3)

  • இதில் 26 சதவீத நைட்ரஜன் உள்ளது. பகுதியளவு அம்மோனியா வடிவத்திலும், பகுதி (6.5 சதவீதம்) நைட்ரேட் நைட்ரஜன் உள்ளது.
  • அம்மோனியம் நைட்ரேட் மற்றும் அம்மோனியம் சல்பேட் கலந்த கலவையாகும்.
  • வெள்ளை நிற படிக வடிவம் அல்லது அழுக்கு கலந்த வெள்ளை நிற துகள்களாக உள்ளது.
  • எளிதாக நீரில் கரையும், வேகமாக செயல்படக் கூடியது.
  • இதன் தரம் நன்றாக இருக்கும் எல்லா விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • அம்மோனியம் சல்பேட்டால் மண்ணில் அமில விளைவு ஏற்படுகிறது.
  • விதைப்பதற்கு முன், விதைக்கும் பொழுது அல்லது மேலுரமாக அளிக்கலாம்.

அமைடு உரங்கள்

  • நீரில் நன்றாகக் கரையக் கூடியது. மண்ணில் எளிதாக சிதைவுறும்
  • அமைடு வடிவத்தில் உள்ள நைட்ரஜன் எளிதாக அம்மோனியாவாகவும், நைட்ரேட் வடிவத்திலும் மண்ணில் மாறும்.

யூரியா (CO (NH2)2)

  • மிக அடர்த்தியான திட உரம், இதில் 46 சதவீத நைட்ரஜன் உள்ளது.
  • இது ஒரு வெள்ளை நிற படிகம். நீரில் நன்றாகக் கரையும்.
  • காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் இதை ஈரம் இல்லாத கலன்களில் வைக்க வேண்டும். எளிதாக அம்மோனியாகவும், நைட்ரேட்டாகவும் மாறிவிடும்.
  • மண்ணில் நைட்ரேட் அம்மோனியா வடிவத்தில் நிலைத்து நிற்கும் வடிகாலின் போது கூட இழப்பு ஏற்படாது.
  • யூரியா தெளிப்பு பயிர்களால் எளிதாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • விதைக்கும் பொழுது அல்லது மேலுரமாக அளிக்கலாம்.
  • எல்லா விதமான பயிர்களுக்கும் பொருந்தும் மேலும் எல்லா விதமான மண்களுக்கும் அளிக்கலாம்.

Urea Pills Granulated Urea

கால்சியம் சைனமைடு (CACN2 )

  • இதில் 20.6 சதவீத தழைச்சத்து உள்ளது.
  • சாம்பல் கலந்த வெள்ளை நிறப் பொடி போன்ற பொருள், ஈரமான மண்ணில் சிதைவுறுவதால் அம்மோனியாவைத் தரும்.

பாஸ்பேட் உரங்கள்

  • பாஸ்பேட் உரங்கள் என்பது பாஸ்பரஸை எளிதாக உறிஞ்சக் கூடிய வடிவத்தில் உள்ள வேதியியல் பொருட்களாகும்.

சூப்பர் பாஸ்பேட் (Ca(H2Po4)2):

  • இது ஒரு முக்கியமான பாஸ்பேட் உரம்.
  • இதில் 16 சதவீதம் P2O5 கிடைக்கும் வடிவத்தில் உள்ளது.
  • அமில மண்களில், அங்கக உரங்களுடன் இணைந்து பயன்படுத்தலாம்.
  • விதைப்பதற்கு முன்போ அல்லது விதைத்த பின்போ அல்லது நடவு செய்யும் போதோ பயன்படுத்த வேண்டும்.

பொட்டாஷ் உரங்கள்

  • பொட்டாசியம் அயனிகள் உறிஞ்சிக் கொள்ளக் கூடிய வடிவத்தில் இருக்கும்.
  • 2 விதமான பொட்டாஷ் உரங்கள் உள்ளன.

அவையாவன:

  • மூரேட் பொட்டாஷ் (KCL) பொட்டாசியம் சல்போட் (K2So4 )
  • நீரில் கரையக் கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாககட கிடைக்கும் வகையில் உள்ளது

பொட்டாசியம் குளோரைடு (KCL)

  • இது ஒரு வெள்ளை அல்லது சிவப்பு நிற துகள்களை உடைய உரம். இதில் 60.0 சதவீத K2O உள்ளது.
  • நீரில் கரையாக கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.
  • மண்ணிலிருந்து உறிஞ்சிக் கொள்ளுவதால் இழப்பு ஏற்படாது.
  • விதைப்பதற்கு முன் அல்லது விதைத்த பின் அல்லது அல்லது விதைக்கும் போது அளிக்க வேண்டும்.
  • இதில் 47 சதவீத குளோரின் உள்ளது.
  • குளோரின் இருப்பதால் புகையிலை, உருளைக்கிழங்கு மற்றும் இதர சில பயிர்களுக்கு ஏற்றதல்ல.

பொட்டாசியம் சல்பேட் (K2So4 )

  • இது ஒரு வெள்ளை உப்பு. இதில் 48 சதவீத K2O உள்ளது.
  • நீரில் கரையக் கூடியது பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடியது.
  • மண்ணில் அமிலத் தன்மை அல்லது காரத் தன்மை ஏற்படுத்தாது.
  • மண்ணில் அமிலத்தன்மை அல்லது காரத் தன்மையை ஏற்படுத்தாது.
  • புகையிலை, உருளைக்கிழங்கு மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றது.
  • பொட்டாசியம் குளோரைடு உடன் மெக்னீசியம் சல்பேட்டை சேர்த்து தயாரிப்பதால் இதன் விலை அதிகமாகிறது.

இரண்டாவது முக்கியமான உரங்கள்:
மெக்னீசியம் உரங்கள்

மெக்னீசியம் உரங்கள் என்பது மெக்னீசியம் அயனிகளைக் கொண்ட வேதிப் பொருளாகும்.
மெக்னீசியம் சல்பேட் (MgSO4)

பொட்டாசியம் அளிப்பு அதிகரிக்கும் போது மெக்னீசியம் உரங்களின் பயன்பாடு குறையும்.
கால்சியம் உரங்கள்

கால்சியம் உரங்கள் என்பது கால்சியம் அயனிகளை உறிஞ்சிக் கொள்ளக் கூடிய வேதிப் பொருளாகும்.

  • இதில் உள்ள முக்கியமான ஆதார பொருள் சுண்ணாம்பு

கால்சியம் குளோரைடு (CaCl26H2O):

  • இதில் 15 சதவீத கால்சியம் உள்ளது
  • அதிகமாக நீரில் கரையக் கூடியது. இதனால் தழைத் தெளிப்பாகப் பயன்படுத்தலாம்

சல்பேட் உரங்கள்

  • சல்பேட் அயனிகளை உறிஞ்சிக் கொள்ளக் கூடிய வேதிப் பொருளாகும்
  • பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸில் மூன்றில் இரண்டு பங்கு அளவு சல்பேட் தேவைப்படுகிறது
  • தழை, மணி, சாம்பல்சத்து உரங்களில் மிகச் சிறிய அளவாக உள்ளது
  • கந்தக உரங்களை பயிர்களுக்கு அளிப்பது மிக தேவையானதாக வேளாண் உற்பத்தி முக்கியமாக அதிக கந்தகத் தேவையுள்ள பயிர்களுக்கு (உதாரணமாக கடுகு) இதன் தேவை அதிகமாகிறது

நுண்ணூட்ட உரங்கள்

  • நுண்ணூட்ட உரங்களின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. ஏனென்றால் மண்ணிலிருந்து அதிகளவு அகற்றப்படுவதாலும் மண்ணில் அதிகளவு சுண்ணாம்பு அளிப்பது, தீவிர வடிகால் வசதி, அதிகளவு தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களைப் பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகமாகிறது
  • ஏழு முக்கியமான உரங்கள் உள்ளன. அவை இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், குளோரின், போரான், மாலிப்டினம்

இரும்பு உரங்கள்

  • நீரில் கரையக்கூடியது பயிர்களின் மீது தழைத் தெளிப்பாக அளிக்கலாம்
  • பயிர்கள் இரும்பு அயனிகள் வடிவத்தில் உறிஞ்சிக் கொள்ளும். பொதுவாக பயன்படுத்தப்படும் இரும்பு உரங்கள் பின்வருமாறு:

பெரஸ் சல்பேட் (FeSO47H2O)

நீரில் கரையக்கூடியது. இதில் 20% இரும்பு உள்ளது

செறிவூட்டப்பட்ட இரும்பு
Fe – EDTA
Fe - EDDPA

தழைச் சத்து அளிப்புக்கு ஏற்றது

மாங்கனீஸ் உரங்கள்

மாங்கனீஸ் சல்பேட்
(MnSO4 7H2O)

நீரில் கரையக் கூடியது
ரோஸ் நிறமுடைய உப்பு, இதில் 24% மாங்கனீஸ் உள்ளது.
தழைத் தெளிப்புக்கு ஏற்றது

செறிவூட்டப்பட்ட மாங்கனீஸ் (Mn – DTA)

இதில் 13% மாங்கனீஸ் உள்ளது.
பயிர்களுக்கு உரமிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

துத்தநாக உரங்கள்

துத்தநாக சல்பேட்
(ZnSO47H2O)

நீரில் கரையக்கூடிய வெள்ளை உப்பு இதில் 23% துத்தநாகம் உள்ளது. தழைத் தெளிப்பாக அளிக்கலாம். இதனுடைய அமில விளைவால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்

துத்தநாக ஆக்ஸை்டு
(ZnO)

70% துத்தநாகம் உள்ளது. மிதமாக நீரில் கரையக் கூடியது மெதுவாக செயல்படும் தழைத் தெளிப்பாகும்

தாமிர உரங்கள்
தாமிர பற்றாக் குறையைப் போக்க தாமிர உரங்கள் பயன்படுகிறது.
தாமிர சல்பேட் (CuSO4 5H2O) - 25% Cu
தாமிர சல்பேட் (CuSO4 H2O) - 36% Cu
போரான் உரங்கள்

போராக்ஸ்
(Na2B4O.10H2O)

11 % போரான் உள்ளது.
நீரில் கரையக்கூடிய வெள்ளை உப்பு மண் மேலுரமாக அல்லது தழைத் தெளிப்பாக பயன்படுத்தலாம்

போரிக் அமிலம்
(H3 BO3)

இதில் 11% போரான் உள்ளது.
வெள்ளை நிற படிகப் பொடி தழைத் தெளிப்பாக அளிக்கலாம்

மாலிப்டினம் உரங்கள்

சோடியம் மாலிப்டேட்
(Na2M0O42H2O)

இதில் 40% மாலிப்டினம் உள்ளது

அம்மோனியம் மாலிப்டேட்
C (NH4)6 M070 24H2O)

இதில் 54% மாலிப்டினம் உள்ளது

  • நீரில் கரையக் கூடிய உப்பு. இதில் மாலிப்டினம் உள்ளது
  • மண் அளிப்பு மற்றும் தழைத் தெளிப்புக்கு ஏற்றது

உர தர நிலை
உரங்களில் குறைந்த அளவு சதவீதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட நிலையே உரதர நிலையாகும்

  • தரங்களில் உள்ள எண்கள் கோடுகளால் பிரிக்கப்பட்டு, ஒரே தொடராக இருக்கும்

உதாரணத்துக்கு, உரபையின் மேலே 28 – 28 – 0 என்ற தரம் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் 100 கிலோ உரத்தில் 28 கி தழைச்சத்து, 28 கிலோ மணித்துச்சத்து மற்றும் சாம்பல் சத்து இல்லை என்று நாம் அறிய முடியும்.
பலதரப்பட்ட தர நிலையில் உள்ள உரங்கள் இந்தியாவில் உள்ளன
அவற்றில் சில
28 – 28 – 0
20 – 20 – 0
14 – 35 – 14
17 – 17 – 17
14 – 28 – 14 மற்றும் பல
உர விகிதம்

உரக்கலவையில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்து சதவீதங்களின் விகிதமே உரவிகிதமாகும். உதாரணத்துக்கு, உர தரநிலை 12 – 6 – 6 – ல் உர விகிதம் என்பது
2 : 1 : 1.
பயிர் ஊட்டச்சத்தை வழங்குபவர்கள்

நேரடி உரங்கள் பயிர்களுக்குத் தேவையான ஊட்டங்களை உரதர நிலையில் குறிப்பிட்டுள்ளபடி வழங்குகிறது.
கட்டுப்படுத்திகள்

தரம் குறைந்த அங்ககப் பொருட்களான மக்கிய மண், நெல் உமி, நிலக்கடலை தோல்கள் மற்றும் இதர பல பொருட்கள் உரக் கலவையுடன் தயாரிப்பின் போது கலக்கப்படுவதால் நீர் ஈர்க்கும் தன்மை குறைகிறது மற்றும் மண்ணில் இயல்நிலை மேம்படுத்தப்படுகிறது.

நிரப்பிகள்
எடை கூட்டும் பொருட்களான மணல், மண், நிலக்கரிப் பொடி மற்றும் பல உரங்களுடன் கலக்கப்படுவதே நிரப்பிகள் ஆகும். இதனால் தேவைப்படக்கூடிய தரத்தில் உரக் கலவையை தயாரிக்கலாம்.

அமிலப்படிவை நடு நிலைப்படுத்துபவை

டோலமைட், சுண்ணாம்பு கல் மற்றும் பல பொருட்கள் உரக் கலவைகளுடன் கலப்பதால் தழைச்சத்து உரங்களின் அமிலப் படிவை நடு நிலைப்படுத்துகின்றன.



Saturday, December 10, 2011

பயிர் சாகுபடியில் உர நிர்வாகம்

நஞ்சையில் சேற்று நெல்

விதை நேர்த்தி:

  • அசோஸ்பைரில்லத்துடன் விதை நேர்த்தி: மூன்று பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் / ஹெக் மற்றும் 3 பொட்டலங்கள் பாஸ்போபாக்டீரியா அல்லது 6 பொட்டலங்கள் அசோபாஸ் (1200 கிராம் / ஹெக்). உயிர் உரங்களை தேவையான தண்ணீரில் கரைத்து விதைகளை விதைப்பதற்கு முன் இரவு முழுவதும் முக்கி வைக்க வேண்டும். (மீதமுள்ள கரைசலை நாற்றங்கால் பகுதியில் தெளித்து விடலாம்)
  • உயிர் கட்டுப்பாடு காரணிகள் உயிர் உரங்களுடன் ஒத்துப் போகும்
  • உயிர் உரங்கள் உயிர் கட்டுப்பாடு காரணிகளை விதை மூழ்குவதற்காக ஒன்றாக கலக்கலாம்
  • பூஞ்சான் கொல்லிகள் மற்றும் உயிர் கட்டு்ப்பாடு காரணிகள் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாது

ஊட்டச்சத்து மேலாண்மை:

  • 1 டன் மட்கிய பண்ணை உரம் அல்லது மட்கிய உரம் 20 செண்ட் நாற்றங்காலில் இடவேண்டும் மற்றும் ஒரே மாதிரியாக மண்ணில் பரப்ப வேண்டும்.
  • 20 – 25 நாள்கள் கழித்து விதைப்பிற்கு பின் நாற்றுகளை பிடுங்கும் போது, அடி உரமாக டி. ஏ. பி அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நடவு வயல்:

ஊட்டச்சத்து மேலாண்மை

அங்கக உரங்களின் அளிப்பு

  • 12.5 டன் பண்ணை எரு அல்லது மட்கிய உரம் அல்லது பசுந்தாள் இழை உரம் 6.25 டன் / ஹெக் என் அளவில் இடவேண்டும்.
  • பசுந்தாள் செடிகளை 20 கி / ஹெக்என்ற அளவில் வளர்த்து பின் 15 செ. மீ ஆழத்திற்கு டிராக்டர் அல்லது பசுந்தாள் பண்ணைக் கருவிக் கொண்டு உழுதுவிட வேண்டும்.
  • பசுந்தாள் உரத்திற்கு பதிலாக சர்க்கரை கழிவு / மட்கிய தென்னை நார் கழிவையும் பயன்படுத்தலாம்.

கோதுமை (டிரைக்கம் ஏஸ்டிவைம்)

பண்ணை எரு அல்லது மட்கிய உரம் அளிப்பு 12.5 டன் / ஹெக் பண்ணை எரு அல்லது மட்கிய உரம் உழவு செய்யாத வயலில் இட வேண்டும்.


செயற்கை உரங்களின் அளிப்பு
:

  1. தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை முடிந்த அளவு மண் ஆய்வு பரிந்துரைப்படி இட வேண்டும். மண் ஆய்வு பரிந்துரை இல்லாவிடில், பரிந்முரைக்கப்பட்ட 80:40:40 தழை, மணி, சாம்பல் சத்து கிலோ / ஹெக் என்ற அளவில் இடவேண்டும்.
  2. பகுதி அளவு தழை மற்றும் முழு அளவு மணி, சாம்பல் சத்து அடியுரமாக விதைப்பதற்கு முன் இட்டு, விதைக்கும் நேரத்தில் பரப்பி விட வேண்டும்

மேல் உரமிடுதல்:

மீதியுள்ள பகுதி தழைச்சத்து உரத்தை உச்சிப் பகுதி வெளி வரும் போது (15 – 20 நாள் விதைப்பிற்கு முன்)

மக்காச்சோளம்
மக்காச்சோளம் (ஜியா மெய்ஸ் எல்)

  1. இறவை மக்காச் சோளம்

பண்ணை எரு அல்லது மட்கிய உரம் அளிப்பு:

  1. முடிந்த அளவு மண் ஆய்வு பரிந்துறைப்படி தழை, மணி, சாம்பல் சத்துஉரங்களை இடவேண்டும். மண் ஆய்வு பரிந்துரை இல்லாவிடில், பொதுப் பரிந்துரையான 135: 65: 5: 50 தழை, மணி, சாம்பல் சத்து கிலோ / ஹெக் துத்தநாக சல்பேட் 37.5 கிலோ / ஹெக் என்ற அளவில் இட வேண்டும்
  2. கால் பகுதி தழைச்சத்து, முழுப்பகுதி மணி மற்றும் சாம்பல் சத்தை அடி உரமாக விதைப்பதற்கு முன் இட வேண்டும்
  3. வரப்பு பயிர்களில் 6 செ.மீ அளவு ஆழத்துக்கு வாய்க்கால் தோண்ட வேண்டும்
  4. உரக் கலவையை உழுகால்களில் இட்டு, புடள ஆழத்துக்கு மண்ணுடன் மூட வேண்டும்
  5. படுக்கை முறை சாகுபடி தொடர்ந்ததால் 6 செ.மீ ஆழம், 60 செ.மீ இடைவெளி விட்டு உழுசால் எழுப்ப வேண்டும்
  6. உரக் கலவையை உழுசால்களை ஒட்டி இட்டு 4 செ.மீ ஆழத்துக்கு மண்ணை மூட வேண்டும்

அசோஸ்பைரில்லம் விதை மற்றும் மண் அளிப்பின் போது, 100 கிலோ தழைச்சத்து / ஹெக் (25% மொத்த தழைச்சத்து ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட படி) இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து அளிப்பு:

    தமிழ்நாடு வேளாண் துறையால் உருவாக்கப்பட்ட நுண்ணூட்டச் சத்து 12.5 கிலோவை மணலுடன் கலந்து 50 கிலோ / ஹெக் அளவு வந்தபின் இடவேண்டும்.



ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

வரையறைகள்

  • பயிரிடுவதற்கு தேவையான ஊட்டசத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும்
  • மண் வளத்தின் நிலவரம் மற்றும் மண்ணின் குறைகளை தீர்க்கக்கூடிய சிறப்பு மேலாண்மை பற்றி முடிவு செய்யவேண்டும்
  • ஊட்டச்சத்து ஆதாரங்களின் இருப்பு பற்றி அறியவேண்டும்
  • விவசாயிகளின் பொருளாதார நிலைமை, ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பெறக்கூடிய லாபம்
  • சமூக ஏற்கம் தன்மை
  • சுற்றுபுறச்சூழலை கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும்
  • சுற்றுப்புறத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும்

பயன்கள்

  • மண்ணில் இருக்கக்கூடிய இயற்கை ஊட்டங்களை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.
  • பயிரின் ஊட்டச்சத்து தேவையையும் இயற்கை மற்றும் செயற்கை ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்து அளிப்பையும் ஒருங்கிணைக்கிறது.
  • பயிர்களுக்கு சமசீர் ஊட்டத்தை அளிக்கிறது.
  • குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையிலிருந்து வரக்கூடிய எதர்மறை விளைவுகளைக் குறைக்கிறது
  • மண்ணின் இயல், வேதியியல், உயிரியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • கார்பன் வெளியீட்டால் மண், நீர், சுற்றுப்புறசூழல் சீர்குறைவதை குறைக்கிறது
  • மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்கிறது
  • மேற்பரப்பு நிரீனால் இழப்பு வாயு மண்டலத்திற்கு ஆவியாகும் ஊட்டச்சத்து போன்றவற்றை குறைக்கிறது.

பகுதிகள்
மண்மூலம்

மண்ணில் எளிதில் கிடைக்கப் பெறாத ஊட்டங்களை கிடைக்குமாறு செய்கிறது. தேர்ந்தெடுத்த பயிர் ரகங்களைப் பயன்படுத்துதல், சாகுபடி முறை மற்றும் பயிர் அமைப்புத் திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.

கனிம உரங்கள்

மிகப் பெரிய குருணைகள், பூசப்பட்ட யூரியா, அமில மண்ணில் எளிதில் கிடைக்கக்கூடிய ராக் பாஸ்பேட்டின் நேரடி பயன்பாடு, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (), எம்.ஒ.பி. மற்றும் நுண்னணூட்ட உரங்கள்.

அங்கக மூலங்கள்

பயிரிடுவதின் துணைப்பொருள்கள், பயிர் சம்பந்தமான தொழிற்சாலையின் துணைப் பொருள்கள். பண்ணை எரு, பறவைகளின் எச்சங்கள், பயிர் கழிவுகள், எச்சங்கள், கழிவு நீர், சாக்கடைக் கழிவு, தொழிற்சாலைக் கழிவுகள்

உயிரியல் மூலங்கள்
நுண்ணுயிரி காரணப் பொருள் மாற்றீடு 15-40 கிலோ தழைச்சத்து ஹெக்டேர்


Friday, December 9, 2011

பயிர் சாகுபடியில் நிலத்தை பண்படுத்தும் முறைகள்

செம்மை நெல் சாகுபடி
நாற்றங்கால்

  • நாற்றங்கால் தேர்வு செய்யப்படவேண்டும். நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
  • ஒரு எக்டர் நடவு செய்ய 20x7.5மீ பரப்பளவுள்ள (150 ச.மீ.) நிலம் போதுமானது. நிலத்தில் வாய்க்காலைத் தவிர்த்து 100 ச.மீ. நிலமே நாற்றங்கால் ஆகும்.
  • உழுது சமன் படுத்தப்பட்ட நிலம், 120 செ.மீ. (5 அடி) அகலமுள்ள பாத்திகளாக 50 செ.மீ. இடைவெளியில் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளில் பரவலாக விசிறி சமன் செய்யப்பட்டு அமைக்கவேண்டும். பாத்திகளின் நீளம் 20 மீட்டராக (சுமார் 60 அடி) அமைதல் சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வதற்கு ஏற்றது.

நஞ்சையில் சேற்று நெல்
நாற்றங்கால் தயாரிப்பு

  • தயாரிக்கப்பட்ட நிலம்2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ ( ஒரு அடி) இடைவெளியுள்ளவாய்க்கால் பாத்தியைச்சுற்றிலும் அமைக்க வேண்டும்
  • பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு. மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம்
  • வாய்க்கால் அமைக்கும் போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலலை சீந்தி மூலம் அமைக்கலாம்
  • பாத்தி சமன்படுத்தப்படுவது மிகவும் அவசியம்

நடவு வயல் பராமரிப்பு
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவு செய்த வயல்களுக்கு ஆரம்ப நீர்த்தேவை குறைவாகத் தேவபைடுகின்றது
  • சேற்றுழவு செய்வதற்கு ஒரிரு நாட்கள்முன்பே தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு நீர் பாய்ச்சுதல் வேண்டும்
  • பின்னர் சேற்றுழவு முறையே செய்யப்படவேண்டும்

Tillage Operations for Field Cros
Tillage Operations for Field Cros

அ. இருக்கம்படாத சேற்று மண் இவ்வகையான மண்ணில் உழுகின்ற இயந்திரமோ கால் நடைகளோ நகரமுடியாத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையைக் குறைக்கவோ தவிர்க்கவோ 5ன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 400 கிலோ எடையுள்ள ‘கல் உருளை’ அல்லது எண்ணை தகரத்தினுள்ள கற்கள் நிரப்பிய உருளை சரியான ஈரப்பத்தில், எட்டு முறை திரும்பத்திரும்ப இழுக்கப்படுவதால், மண் இறுகி பதப்பட வாய்ப்புள்ளது.
ஆ. உவர் நிலம் ( 8.5க்கு மேல்) இம்மாதிரியான நிலத்தினை ந்னகு உழுது அந்நிலத்தின் ‘ஜிப்சம் தேவை’யின் பாதி அளவிற்கு, ஜிப்சம் இடப்படுதல் வேண்டும். மேலும் 5 டன் பசுந்தழை உரத்தினையும் இட்டு நன்கு மிதித்து, பின்னர் சரியான முறையில் வடிகால் அமைத்து, தொடர்ந்து 10-15 நாட்களுக்கு நீர் நிறுத்தி வரவேண்டும். அதன் பின்னர் நடவு செய்யலாம். நடவிற்கு முன்னர் 37.5 கிலோ ஜிங்சல்பேட் சம அளவு மணலுடன் கலந்து வயலின் மேற்பரப்பில் àவிவிடவும்.
இ. களர் நிலம் (நுஊ 4 னள, அக்கு மேல் காணப்படும் தருணத்திற்கு) குறுக்கு நெடுக்காக ஆழ் வடிகால் அமைத்து, 5டன் பசுந்தழை உரமிட்டு 10-15 நாட்கள் நீர் கட்டி நீர் மண்ணினுள் ஊடுருவி மறைந்து விடுவதே போதுமானது. நடவு செய்ய 25 சதம் அதிகம் தழைச்சத்து அடியுரமாக இடப்படவேண்டும். ஜிங்சல்பேட் உவர் நிலத்திற்கு கூறப்பட்டது போல் செய்யப்படவேண்டும்
ஈ.அமிலத்தன்மையுடை நிலவகைகளுக்கு சுண்ணாம்புக்கல் 2.5 டன் ஒரு எக்டருக்கு இடப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும். இம்முறை தொடர்ந்து ஐந்தாவது பயிர் வரை பின்பற்றப்படவேண்டும்.

சேற்றுவயல் நேரடி விதைப்பு
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவு அவசியம்
  • விதைப்பதற்கு முன்பாக நீர் எட்டி சேற்றுழவு செய்யப்படுதல் வேண்டும்
  • மிகமிக அவசியம் நிலம் நாற்றங்காலைப் போன்றே சமன் செய்யப்படுதல்
  • இங்கும் அங்கும் மேடு பள்ளமாகவோ, குண்டும் குழியுமாகவோ இருப்பின் அங்கெல்லாம் நீர் தேங்கி நாற்றுக்கள் சரி வர முளைக்காமல் இடைவெளி அதிகம் காணப்படும்.
  • நிலம் சமன்படுத்துதல் நீர் மேலாண்மைக்கும், களை மேலாண்மைக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நன்கு உணர்ந்து. தக்கவாறு நிலம் சமன் படுத்தப்பட வேண்டும்.
  • அரை அடி அகழத்தில் சிறிய வடிகால் வாய்க்கால்கள் நிலத்தின் குறுக்கேயும், 3 மீ இடைவெளியிலும், வரப்பின் ஒரத்திலும் அமைத்தல் நல்லது.

இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும்அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம்’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம் 1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்படவேண்டும்.

நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்
நிலம்தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும் அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம்1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்டவேண்டும்

புழுதிவிதைத்த மேட்டுக்கால் நெல்
நிலம்தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும் அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம்1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்டவேண்டும்

கோதுமை
நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.

எரு இடுதல்
மக்கிய தொழு உரம் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

கம்பு
நிலம் தயாரித்தல்

கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

மக்காச்சோளம்
நிலம் தயாரித்தல்

முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்ததை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும்.

கேழ்வரகு
நிலம் தயாரித்தல்

கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

சோளம்
நிலம் தயாரித்தல்

கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

உளுந்து
நிலம் தயாரித்தல்

நில மேம்பாடு

நில மேம்பாட்டிற்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடவேண்டும்

Tillage

தட்டைப்பயிர்
நிலம் தயாரித்தல்

வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

பச்சைப்பயிறு
நிலம் தயாரித்தல்

வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும். மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மனண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

ஆமணக்கு
நிலம் தயாரித்தல்

அமில நிலங்களைத் தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு மூன்று தடவை உழவேண்டும்.

எள்
நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இரு, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூடவேண்டும்.

நிலக்கடலை
நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும்.
உளிக்கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கை உடைத்தல்
குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக்கலப்பையைக் கொண்டு 50 செ.மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர் எதிர் திசையில் உழவேண்டும். இவ்வாறு 3 வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும்

பேய் எள்
நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.

குசும்பா
நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்
தொழு உரமிடுதல்

நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்

சூரியகாந்தி

Tillage Tillage

நிலம் தயாரித்தல்
நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தன்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்.

பருத்தி
நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5 மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழவேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் இடுவதின் மூலம் கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.
கரும்பு

  1. டிராக்டரில் இணைக்கபட்டு இயங்கும் சட்டி அல்லது விக்டரி கலப்பை கொண்டு நிலத்தினை ஆழமாக உழுதல் வேண்டும்.மேலும் வயலில் உள்ள மண் கட்டிகளை உடைத்து விடவும் மண் பொலபொலப்புத் தன்மை அடையவும் ஜீனியர் கலப்பை கொண்டு உழுதல் வேண்டும்.
  2. சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தின நன்கு கமன்படுத்த வேண்டும்
  3. நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.முி. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்ப கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ. ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்
  4. நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்

தீவனச் சோளம்
நிலம் தயாரித்தல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) கலந்து இட வேண்டும். பின்னர் 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீ நீளமும் 60 செ.மீ இடைவெளியும் கொண்ட பார்கள் அமைக்க வேண்டும்.

தீவன மக்காச் சோளம்
நிலம் தயாரித்தல்

உழவு

இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.

தொழு உரம் இடுதல்
எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது மட்குடன் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) ஆகியவற்றை உழும்போது வயலில் இட்டு உழவேண்டும். 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.

நீல கொழுக்கட்டைப் புல்
நிலம் தயாரித்தல்

மண் வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து
மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர், நிலங்களிலும் பயிர் செய்யலாம்.
உழவு

நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இரண்டு அல்லத மூன்று முறை உழுது பாத்திகள் அமைக்க வேண்டும்.

குதிரை மசால்
நிலம் தயாரித்தல்

உழவு

இரும்புக் கலப்பை கொண்டு 3 அல்லது 4 முறை உழுது பண்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்கவேண்டும்.
தொழு உரம் இடுதல்

தொழு உரம் அல்லது கம்போஸ்ட் எக்டருக்கு 12. 5 டன் என்ற அளவில் இட வேண்டும்.

தீவன தட்டைப்பயறு
நிலம் தயாரித்தல்

உழவு

நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழ வேண்டும்.
தொழு உரமிடுதல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவும்.

முயல் மசால்
நிலம் தயாரித்தல்

உழவு
இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும்.

தொழு உரம்
எக்டருக்கு 10 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்டை உழவின் போது மண்ணில் கலக்க வேண்டும்.

வேலி மசால்
நிலம் தயாரித்தல்
உழவு
இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
பார் பிடித்தல்
6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

நிலம் பண்படுத்துதல்

உழவு

உழவு என்பது மண்ணின் பெளதீக குணங்களை உழவுக் கருவிகள் மூலம் சாதுர்யமாக கையாண்டு விதை முளைப்பு நாற்று வளர்ப்பு மற்றும் பயிர் / தாவர வளர்ச்சி போன்றவற்றிற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல்.

  • காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
  • போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.
  • இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவக்கும்.
  • அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)
  • பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.
  • இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.
  • மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது.

நில பண்படுத்துதலின் வகைகள்

தேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

முதன்மை உழவின் வகைகள்

பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்தில உழவு போன்றவை ஆகும்.

ஆழமான உழவு முறை

ஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்க்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை (Pigeonpea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை.

மேலும் ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும். மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும்.


ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.

அடிமண் உழவு முறை

கடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும்.


எடுத்துக்காட்டாக வண்டல் மண்ணில் கடின மண் அடுக்கு அற்ற நிலையில் 2 மீட்டர் ஆழம் வரை பருத்தி வேர் வளரும். கடின மண் அடுக்கு இருக்கும் போது 15-20 செ.மீ ஆழம் வரையே வளரும். இதே போன்று கரும்பில் செங்குத்து வேர் வளர்ச்சி கடின மண்ணினால் தடுக்கப்படுகிறது மற்றும் கிடையான வேர் வளர்ச்சி அதை ஈடுசெய்ய அடிமண் உழவு மேல் மண்ணை சிறு பாதிப்புடன், கலக்கச் செய்யலாம். கடின மண் கட்டிகளை உடைக்கும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் பொழுது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது. உளிக்கலப்பை கொண்டு உழும் பொழுது 60-70 செ.மீ அடியில் காணப்படும் கடின உடையும் அடிமண் உழவின் பலன் பல நாட்களுக்கு காணப்படும் அடிமண் சால்கள் மூடுவதைத் தடுக்க, செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது.

வருடாந்திர உழவு

வருடம் முழுவதும் நடைபெறும் உழவு / செயல்பாடுகளே வருடாந்திர உழவு ஆகும். மானாவாரி வேளாண்மையில் கோடை மழையின் உதவியுடனே, வயல் முன்னேற்பாடுகள் தொடங்கும். விதைக்கும் வரை மேலும் மேலும் உழவு செய்யப்படும். அறுவடை முடிந்த பின்பு, பருவ நிலை அல்லாத காலங்களில் கூட தொடர்ந்து உழவு அல்லது கொத்துதல் / பலுதல், களை வளர்ச்சியை தடுப்பதற்கு செய்யப்படும்.

இரண்டாம் நிலை உழவு

முதன்மை நிலை உழவிற்கு பிறகு மண்ணில் செய்யப்படும் இலேசான அல்லது இளகுவான அனைத்துச் செயல்களும் இரண்டாம் நிலை உழவு என அழைக்கப்படுகிறது. உழவிற்கு பிறகு, வயல்வெளி பாதி பிடுங்கப்பட்ட தாள்கள் மற்றும் களைகளுடனான பெரிய மண் கட்டிகளைக் கொண்டு காணப்படும்.


கட்டிகளை உடைப்பதற்கு மற்றும் மீதமுள்ள களை மற்றும் தாள்களை பிடுங்கி களைவதற்கும் கட்டி உடைத்தல் / பலுதல் செய்யப்படுகிறது. இதற்கு சட்டிப்பலுகு, கொத்துக் கலப்பை, கத்தி பலுகு போன்றவை.


கடின கட்டிகளை உடைத்து மண் மேற்பரப்பை சீராக்கவும், ஓரளவு மண்ணை சமன்படுத்தவும், பரம்பு அடித்தல், பலகைக் கொண்டு சமன் செய்யப்படுகிறது. உழுதலைத் தொடர்ந்து, கட்டி உடைத்தல் மற்றும் பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பதற்கு தயாராக இருக்கும். பொதுவாக விதைத்தலும் ஒரு வகை இரண்டாம் உழவிலேயே அடங்கும்.

நாற்றுப் படுக்கை வடிவமைத்தல் மற்றும் விதைத்தல்

நாற்றுப் படுக்கை தயார் செய்த பின், நீர்ப்பாய்ச்சல் மற்றும் விதைத்தல் அல்லது நாற்று நடுதலுக்கேற்ப வயல் வடிவமைக்கப்படுகிறது. இவ்வகை செயல்கள் பயிரினைப் பொருத்தது. கோதுமை, சோயாபீன், மொச்சை, கம்பு, நிலக்கடலை, ஆமணக்கு போன்ற பெரும்பாலான பயிர்களுக்கு சமமான விதைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாம் நிலை உழவிற்கு பின் இவ்வகைப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன. எனவே மானாவாரியில் ஆழச்சால் அகலப்பாத்திகளை வடிவமைத்து பருவ காலம் தொடங்கு முன் விதைப்பு செய்யலாம்.

மக்காச்சோளம், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு வயலில் பாத்தி மற்றும் வரப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. கரும்பு, சால் அல்லது சிறு குழிகளில் பயிரிடப்படுகிறது. புகையிலை, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களுக்கு இடையேயும், வரிசைகளுக்கு இடையேயும் சமமான இடைவெளி கொண்டதாகப் பயிரிடப்படுகின்றன. இதனால் இரண்டு வழிகளில் ஊடு பயிர் செய்ய உதவுகிறது. வயல் முன்னேற்பாடுகள் முடிந்த பின் இரண்டு பக்கங்களிலும் நேர் கோடாக அடையாளமிடப்படுகின்றது. அக்கோடுகளினட வழிமறிப்புள்ளிகளில் பயிர்கள் நடப்படுகின்றன.

சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி

பயிர் வளர்ந்த பின் செய்யப்படும் அனைத்து உழவு செயல்களும் சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி ஆகும். அவை மேலுரமிடுதல், மண் அணைத்தல் மற்றும் ஊடுபயிரிடுதல் போன்றவை. நாட்டுக் கலப்பை அல்லது சால் கலப்பைக் கொண்டு மண் அணைத்தல் செய்வதின் மூலம் பயிரின் அடிப்பகுதியில் சால் அமைக்கப்படுகிறது. கரும்பில் இது பயிர் சாயாமல் இருக்கத் துணையாக இருக்கும். உருளைக்கிழங்கு போன்ற கிழங்குப்பயிரில் கிழங்கு வளர்ச்சிக்கு உதவும் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச வசதியாக அமையும்.

ஊடுபயிர் உற்பத்தியில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை களைவதற்கு கத்தி பலுகு, சுழற்சி பலுகு போன்றவை பயன்படுகின்றன. கரிசல் மண்ணில், ஊடுபயிர் இடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

உழவுக் கருவிகள்
  • உழவுக் கருவிகள், அவற்றின் பயன்பாட்டினை பொருத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதன்மை நிலை உழவுக் கருவிகள்

  • மேல்மட்ட மண்ணைத் திறந்து இளகுவாக செய்வதற்கு பயன்படும் கருவி கலப்பை ஆகும். கலப்பைகள் பொதுவாக முதன்மை உழவிற்கு பயன்படுகின்றன. கலப்பைகள் மூன்று வகைப்படும் அவை : மரத்தினால் ஆகிய கலப்பை, இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை மற்றும் சிறப்பு கலப்பைகள்.

மரத்தாலாகிய கலப்பை அல்லது கலப்பை / நாட்டுக் கலப்பை

நாட்டுக் கலப்பை என்பது இரும்புக் கொழு முனை உடன் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு கருவி ஆகும். இது உடற்பகுதி தண்டுப்பகுதி மற்றும் கைப்பிடி என மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இது எருதுகளைக் கொண்டு உழுவதற்கு பயன்படுகிறது. இது மண்ணில் வடிவிலான சால் அமைக்கிறது. மேலும் இது மண்ணை புரட்டாமல் உழுகிறது. உழுதல் முழுமையாக இருக்காது ஏனென்றால் சில சமயம் இரண்டு சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் வரிசையில் விட்டுப் போக வாய்ப்பு உள்ளது. குறுக்கு உழவினால் இது போன்று ஏற்படாமல் தடுக்கலாம். இருந்த போதும் சிறிய சதுரப்பரப்புகள் விட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

மண் புரட்டும் கலப்பை

மண் புரட்டும் கலப்பை இரும்பால் ஆனது ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி மாடுகளைக் கொண்டு உழுவதற்கு பயன்படுகிறது. மாடுகளின் எண்ணிக்கை மண்ணின் தன்மையைப் பொருத்து இக்கலப்பை டிராக்டர் கொண்டு உழுவதற்கு ஏற்றது.

வளைப்பலகைக் கலப்பை

வளைப்பலகை, கொழுமுனை, சால் சுவறின் மீது செல்லும் பாகம் (நிலப்பக்கப்பகுதி) இணைக்கும் தண்டு / இணைப்புச் சட்டம், பிராக்கட் (Bracket) மற்றும் கைப்பிடி போன்ற பாகங்களை வளைப்பலகைக் கலப்பை கொண்டுள்ளது. இவ்வகைக் கலப்பையில் சால்கள் நேர்த்தியாக அமைவதோடு நன்றாக மண் புரட்டப்படுகிறது. அனைத்துப் பகுதியும் உழவு செய்யப்படுகிறது. மாடுகளினால் உழுவதற்கு பயன்படுத்தப்படும் வளைப்பலகை கலப்பை சிறியதாக 15 செ.மீ ஆழம் வரை உழக்கூடியதாக இருக்கும். டிராக்டரில் இணைக்கப்படும் வளைப்பலகை கலப்பை 2 கலப்பைகளை கொண்டது மற்றும் இது 25 முதல் 30 செ.மீ ஆழம் வரை உழுவக்கூடியது வளைக்கலப்பை மண்ணை புரட்டி உழுவதுற்கு அவசியமாக உள்ளப் பகுதியில் பயன்படுகிறது. வெற்றிக் கலப்பை என்பது எருதுகளைக் கொண்டு உழுவதற்குப் பயன்படும் சிறிய சட்டத்தைக் கொண்ட வளைப் பலகைக் கலப்பை ஆகும்.

சட்டிக் கலப்பை

சட்டிக்கலப்பை, பொதுவாக பயன்படுத்தப்படும் வளைப்பலகைக் கலப்பையை சிறிது ஒத்துள்ளது. உருளக்கூடிய பெரிய குழிவான சட்டிக் கலப்பை வளைப்பலகைக் கலப்பையில் உள்ள கொழுமுனை மற்றும் வளைப்பலகைக்கு பதிலாக பொறுத்தப்பட்டுள்ளது.

சட்டிக்கலப்பை சால் மண்ணை நன்றாக அள்ளி ஒரு பக்கமாக புரட்டுகிறது. பொதுவாக சட்டிக்கலப்பை 60 செ.மீ விட்டம் கொண்டது இது சுமார் 30-35 செ.மீ அளவான சால் மண்ணை திருப்பக்கூடியது சட்டிக்கலப்பை பொதுவாக அதிக் களை கொண்ட வயலில் பயன்படுகிறது. ஏனென்றால் சட்டிக்கலப்பை களைகளை நன்றாக வெட்டி மண்ணுடன் கலக்கச் செய்கிறது. சட்டிக் கலப்பை கற்கள் அற்ற நிலையில் நன்றாக உழும். வளைப்பலகை கலப்பையில் உள்ளது போன்று இதில் மண் கட்டிகளை தனியாக உடைக்கத் தேவையில்லை.

திருப்பிப் போடும் கலப்பை அல்லது ஒரு வழிக் கலப்பை

இவ்வகைக் கலப்பையில் அடிப்பகுதி ஒரு தூலத்துடன் வளைப் பலகைக் கலப்பையில் இருப்பது போல இணைக்கப்பட்டிருக்கும். கொழு முனையானது காலத்திற்கு வலது அல்லது இடது புறத்தில் திருப்பியவாறு இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகை அமைப்பு மேடான நிலத்தில் திருப்பி போட்டவாறு உழுவதற்கு உதவுகிறது. இருந்து போதும் இவ்வகை கலப்பையில் ஒரு பக்கமாகவே மண்ணைத் திருப்பி போட்டு உழுகிறது.

சிறப்புக் கலப்பைகள்
ஆழக்கலப்பை

கடின மண் தட்டுக்களை மண் மேற்பரப்பிற்குக் கொண்டு வராமல் உடைப்பதற்கு ஏற்றவாறு ஆழக்கலப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழக்கலப்பையின் ஒருங்கிணைக்கும் பகுதி வி வடிவில் குறுகியும் கொழு முனை அகன்றும் காணப்படுவதால் ஆழப்பகுதியில் உள்ள கடின மண்ணை உடைக்கும் அதே சமயம் மண்ணில் குறைவான உழவே இருக்கும்.

உளிக்கலப்பை

உளிக்கலப்பை கடின அடி மண்ணை உடைக்கவும். ஆழமான உழவிற்கும் (60-70 செ.மீ) அதே சமயம் குறைவான மேற்பரப்பு மண் பாதிப்புடன் உழுவதற்கு பயன்படுகிறது. உளிக் கலப்பையின் இணைப்புப் பகுதி (உடற்பகுதி) மிகச் சிறியதாகவும், மாற்றி அமைக்கும் கொழுமுனைகளைக் கொண்டதாகவும், இருப்பதினால் மண் மேற்பரப்பில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்படுகிறது. இவ்வகைக் கலப்பையில் மாற்றி அமைக்கக்கூடிய கொழு முனை இருப்பதினால், மேற்பரப்பில் உழுவதற்கு ஏற்றவாறு அமைகிறது.

சால் கலப்பை

சால் கலப்பையில், இரண்டு வளைப் பலகைகள் காணப்படுகின்றது. அவற்றில் ஒன்று மண்ணை வலப்புறமாக தள்ளுகிறது. மற்றொரு பலகை, மண்ணை இடப்புறமாக புரட்டுகிறது. இரண்டு வளைப்பலகைக்கும் கொழு முனை பொதுவாக காணப்படுகிறது. எ.கா இரு முனைக் கொடு இவ்வளைப்பலகைகள் பொதுவான ஒருங்கிணைக்கும் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சால் கலப்பை வயலில் சால் மற்றும் வரப்புகளை ஏற்படுத்துவதுடன் பயிர்களுக்கு மண் அணைக்கப் பயன்படுகிறது. இரண்டு சால் கலப்பைகள் 150 செ.மீ இடைவெளிக் கொண்டதாக இணைக்கப்படும் போது அகன்ற சால் மற்றும் வரப்புக்களை அமைக்க உதவுகிறது.

சுழல் கலப்பை / கட்டி உடைப்பான்
சுழல் கலப்பை, மண்ணைப் பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணைப் பிளப்பதற்கு கத்திப் போன்ற கொழு முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழக்கூடியது இது இளகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

குழிப்படுக்கை அமைக்கும் கருவி

குழிப்படுக்கை அமைக்கும் கருவி ஒன்று அல்லது இரண்டு வளைப்பலகைகள் அல்லது கொழுக்களைக் கொண்ட ஒரு கனமான கருவி ஆகும். இவ்வகைக் கொழுக்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இக்கருவி ஒருமுகப்படுத்தப்பட்ட சால்கள் அமைக்க (சிறு நீர்த்தேக்கம் மற்றும் பாத்திகளைக் கொண்ட சால்) உதவுகிறது. இவ்வகைப் பாத்தி மழைக்காலங்களில் மழைநீர் வீணாவதையும் தடுக்கிறது மற்றும் குறைவான மழைக் கொண்ட பகுதிகளில் மழை நீரை பலன் கிரகிக்க உதவுகிறது.

இரண்டாம் உழவுக் கருவிகள்

கொத்துக் கலப்பைகள், பலுகுகள், சாரப்பலகைகள் மற்றும் சுழல் கலப்பைகள் போன்றவை இரண்டாம் உழவிற்கு பயன்படுகின்றன.

டிராக்டரால் இயங்கும் கொத்து கலப்பை

சிறுக்கட்டிகளை உடைத்தல் மற்றும் விதைப்படுக்கை தயாரிக்க ஏற்றவாறு உழுதல் போன்றவற்றிற்கு கொத்துக் கலப்பை உதவுகிறது. கொத்துக்கலப்பை கொழுகள் அல்லது கூர்மையான பலுகுகளை கொண்டது. இது விதைப்பதற்கு முன், உழப்பட்ட வயலை மேலும் நன்கு உழுவதற்கு உதவுகிறது. முதன்மை உழவிற்கு பின் முளைத்த களைகளை கலைவதற்கும் இவ்வகை உழவு உதவுகிறது. கொத்துக் கலப்பையில் கொழுக்கள் இரண்டு வரிசைகளில் ஒரு சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு வரிசைகளில் சந்தி இடைவெளிகளில் இருப்பது போல இணைக்கப்பட்டுள்ள கொழுக்களின் முக்கிய குறிக்கோள் தாவரக் கழிவுகள் மற்றும் சிறு கட்டிகள் கலப்பையில் அடைக்காமல் இருக்க உதவுவது ஆகும். சட்டத்தில் உள்ள துவாரங்களின் மூலம் கொழுக்களின் அளவைத் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கலப்பையில் 7 முதல் 13 கொழுக்கள் காணப்படும். கொழு முனைகள் உடைந்து விட்டால், மாற்றிக் கொள்ளலாம்.

சுவீப் கொத்துக் கலப்பை

தாள் போர்வை உழவு முறையில் இடர்பாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், சாதாரண கலப்பைகள் கொண்டு உழுவது கடினமானது சுவீப் கலப்பை இதற்கு ஏற்றது ஆகும். சுவீப் கலப்பையின் சட்டத்தில் பெரிய தலைகீழான வி வடிவிலான கத்திகள் இணைக்கப்பட்டுள்ளன. இக்கத்திகள் மண் மட்டத்திற்கு இணையாக 10 முதல் 15 செ.மீ ஆழத்தில் உழுகின்றன. இக்கத்திகள் இரண்டு வரிசையில், சந்தி குறுக்காக கலப்பை சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீப் கலப்பை முதல் உழவில் 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. பின்வரும் உழவுகளில் மேலோட்டமான உழவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கலப்பை களைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இக்கலப்பை நிலக்கடலை அறுவடைக்கு உதவுகிறது.

பலுகு கலப்பைகள்

பலுகு கலப்பைகள், மேலோட்டமான உழவுக்குத் தேவைப்படும் செயல்களான விதைப்படுக்கைகள் தயாரித்தல், விதைகளை மூடுதல் மற்றும் களைகளை களைவதற்கு போன்றவற்றிற்கு பயன்படுகின்றன. பலுகு கலப்பைகள் இரண்டு வகைப்படும்.
அவை : சட்டிப்பலுகு கலப்பை மற்றும் கத்தி பலுகு கலப்பை.

சட்டிப்பலுகு கலப்பை

சட்டிப்பலுகு கலப்பை 45 முதல் 55 செ.மீ விட்டம் கொண்ட குழிவான தட்டுக்களைக் கொண்டிருக்கும். இத்தட்டுக்கள் சட்டிக்கலப்பையின் தட்டுக்களைவிட சிறிய அளவுடையதாக இருக்கும் ஆனால் அதிக எண்ணிக்கையில் காணப்படும் இத்தட்டுக்கள் சக்கரம் சுழலும் அச்சில், 15 செ.மீ இடைவெளிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஜோடி, தொகுதி தட்டுக்கள் இரண்டு அச்சுக்களில் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்துத் தட்டுக்களும் அச்சினை மையமாகக் கொண்டே சுழலும். இத்தட்டுக்கள் மண்ணை உழுது, செவ்வனே மண் கட்டிகளை உடைக்கின்றன.

கத்திப்பலுகுக் கலப்பை

கத்திப்பலுகு கலப்பை தாள் மற்றும் களைகளை நீக்குவதற்கு / மேலோட்டமான மண் கட்டிகளை உடைப்பதற்கு விதைகளை மூடுவதற்கும் ஊடுபயிர் உழவிற்கு மற்றும் நிலக்கடலை அறுவடைக்கு என வேறுபட்ட செயல்களுக்கு கத்திக் கலப்பை உதவுகிறது. ஊடுபயிர் வேளாண்மையில் கத்தி பலுகுக் கலப்பை பயன்பாட்டை விவரிக்கப்பட்டிருக்கிறது. கத்திக் பலுகு கலப்பை இரண்டு வகைப்படும். அவை

  1. பழமையானது, உள்நாட்டு கத்திப் பலுகு கலப்பை
  2. புதுமையானது, மேம்பட்ட கத்திப் பலுகு கலப்பை

பாரம்பரிய கத்திப் பலுகு கலப்பை

பாரம்பரிய கத்திப்பலகு கலப்பை குண்டக்க என்று அழைக்கப்படுகிறது. இதில் முளைப்பகுதியில் இரண்டு எழுச்சிகளை கொண்ட சட்டம் காணப்படுகிறது. ஒரு கத்தி அந்த எழுச்சி பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. குண்டக்க வின் மற்ற பாகங்கள் இரண்டு தண்டு கம்பங்கள் மற்றும் ஒரு கைப்பிடி ஆகும். சட்டத்தின் நீளம் மற்றும் எடையைக் பொறுத்து அதன் பெயர் மற்றும் பயன்பாடு மாறுபடுகிறது.

பரப்புப் பலகை மற்றும் சுழல் கலப்பை

பரம்புப் பலகை என்பது மிகவும் எளிமையான 2 மீட்டர் நீளம் கொண்ட கனமான மரச்சட்டத்தினால் ஆனது. அதனுடன் ஒரு தண்டு மற்றும் கைப்பிடி இணைக்கப்பட்டிருக்கும். உழவின் பொது பெரும்பாலான சிறு மண்கட்டிகள் பரப்பு பலகையின் கனமான எடையினால் நொறுங்குகின்றன. இது விதைப்பதற்கு பின் தேவைப்படும் மெல்லிய சமப்படுத்தலுக்கும மற்றும் சீர்திருத்தத்திற்கும் பயன்படுகிறது. சுழல் கலப்பை கடின கட்டிகளை உடைப்பதற்கு மற்றும் விதைப்பு வரிசையை சமன் செய்யவும் பயன்படுகிறது.

விதைப்படுக்கை தயார் செய்ய உதவும் கருவிகள்
நாட்டுக்கலப்பை
சால் கலப்பை
பார் அமைக்கும் கருவி

நாட்டுக் கலப்பை மற்றும் சால் கலப்பை, வயலில் சால் மற்றும் பார் அமைக்க அல்லது பாசனத்திற்கு கால்வாய் வடிவமைக்கப் பயன்படுகின்றன.

ஒரு சட்டத்துடன் சால் கலப்பையை இணைத்து அகன்ற சால் படுக்கைகளை அமைக்கப் பயன்படுத்தலாம்.

பொதுவாக தோட்ட நிலத்தில் பாத்திகள் மண்வெட்டியைக் கொண்டு வேலையாட்கள் மூலம் அமைக்கப்படுகிறது. சரிவான நிலப்பகுதியில் குறுக்காக பாத்திகய் அமைத்து, மழை நீரை தடுத்து நிறுத்துவதன் மூலம் மண் ஈரப்பதத்தை அதிகப்படுத்த இது பயன்படுகிறது. பார் அமைக்கும் கருவி, வேலையாட்களுக்’கு பதிலாக பார்கள் அமைக்கப் பயன்படுகிறது. இக்கருவியில ஒரு ஜோடி இரும்பு வளைப்பலகை எதிர்எதிராக இருக்கும் படியும் மற்றும் முன்பக்கம் அகன்றும், பின்பக்கம் குறுகியும் பார் அமைக்க ஏதுவாக இணைக்கப்பட்டுள்ளன.

அடையாளமிடும் கருவி மூலம், சதுர நடவு முறையில் வழிமாறிப் புள்ளிகளில் நாற்று நடவிற்கு அடையாளமிடப்படுகிறது. இக்கருவியில் ஒரு சட்டத்தில் 3 அல்லது 4 கட்டை (மர) சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சக்கரங்களுக்கு இடையேயான இடைவெளி பயிர் இடைவெளியை பொறுத்து மாறுபடும். இக்கருவியை இரு திசைகளில் ஒட்டும் போது மேலோட்டமான ஆழமில்லாத சிறிய சால்கள் இரு திசைகளிலும் அமைக்கப்படும். குறுக்கு வெட்டு புள்ளிகளில் நாற்று நடப்படுகிறது.

விதைப்பதற்கு பயன்படும் கருவிகள்

நாட்டுக்கலப்பை மூலம் வடிவமைக்கப்பட்ட சால்களில், விதைகள் கைகளின் மூலம் விதைக்கப்படுகின்றன. இவ்விதைகள், சால்களில் தொடர்பின்றி வெவ்வேறு ஆழத்தில் விழும் வாய்ப்புகள் உள்ளது. இப்பிரச்சனையை சரி செய்ய அக்காடி பயன்படுத்தப்படுகிறது. அக்காடி என்பது ஒரு முனை கூர்மையாகவும், மற்றொரு முனை அகன்றும் காணப்படும் ஒரு மூங்கிலினால் ஆன கருவி ஆகும். இந்த அக்காடி நாட்டுக் கலப்பையுடன் கட்டப்படுகிறது மற்றும் விதை அதன் அகன்ற முனையில் போடப்படும். அப்போடப்பட்ட விதையானது, மூங்கில் குழாய் வழியாக கீழிரங்கி, கலப்பை மூலம் உருவாகும் சால் பகுதியில் விழுகிறது.

விதைக்கும் கருவி / விதைப்பி

விதைக்குங்கருவியில் ஒரு மரச்சட்டத்தில் 3 முதல் 6 கொழு முனைகள் இணைக்கப்பட்டிருக்கும். இக்கொழுமுனைகள் விதைப்பதற்கு ஏற்றவாறு சால்களை அமைக்கின்றன. கொழுமுனைகளுக்கு அருகில் துளைகள் இருக்கும். இத்துளைகளில், மூங்கில அல்லது இரும்பாலான சிறு விதை குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். இச்சிறு விதைக் குழாய்கள் மேல் பகுதியில் ஒரு மரத்தாலான விதைக் கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். விதைக்குங்கருவிக்கு பின் நடந்து வரும், திறமை பெற்ற தொழிலாளி, ஒரே சீராக விதையை, விதைக் கலனுள் போட்டுக் கொண்டே வருவார்.

உரமிடும் மற்றும் விதைக்குங்கருவி

உரங்கள் பொதுவாக 5 செ.மீ ஆழத்தில் மற்றும் விதைக்கும வரிசையிலிருந்து 5 செ.மீ தொலைவில் இடப்படும். உரமிடுதல் மற்றும் விதை ஊன்றுதல் இரண்டு செயல்களும் ஒரே நேரத்தில் உரமிடும் மற்றும் விதைக்குங்கருவி மூலம் செய்யப்படுகிறது. இக்கருவி அடிப்படையில் விதைக்குங்கருவியை ஒத்தது, இதில் உரத்திற்கு தனியாக கொழுமுனைகள் மற்றும் கலன் அமைந்திருக்கும்.

எந்திர விதைக்குங்கருவி

இவ்வகை எந்திர விதைக்குங்கருவியில் ஒரு விதைக்கலன் அடிப்பகுதியில் சிறு துளைகளுடன் காணப்படும். அத்துளைகளில் விதைக்குழாய்கள் விதைகள் செல்வதற்காக இணைக்கப்பட்டிருக்கும். ஒரு சுழலும் தன்மைக் கொண்ட, களைகளை உடைய தட்டு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். சுழலும் தட்டின் துளையும், கலனின் அடிப்பகுதியில் உள்ள துளையும இணையும் போது, விதை, விதைக்குழாயின் வழியாக மண்ணை அடைகிறது. இரண்டு துளைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி தூரம், இரண்டு பயிர் வரிசைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றலாம். பயிர்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை சுழலும் தட்டுத் துளைகளை மாற்றுவதன் மூலம் மாற்றி அமைக்கலாம். பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டு தானியங்கி விதைக்குங்கருவிகளும் உள்ளன.

இடை உழவுற்க்கான கருவிகள்

  1. மரக்கலப்பை
  2. சிறிய கத்தி பலுகுக் கலப்பை
  3. களையெடுக்கும் கருவி - சுழலும் களையெடுக்கும் கருவி

நாட்டுக்கலப்பை மற்றும சால் கலப்பை ஆகியவை கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு மண் அணைத்தலுக்கு பயன்படுகிறது. அகன்ற இடைவெளி கொண்ட பயிர்கள் மற்றும் பழமரங்களில் கிளைகளைக் கட்டுப்படுத்த மேலோட்டமான உழவிற்கு நாட்டுக்கலப்பை பயன்படுகிறது.

சிறிய அளவு கத்திப் பலுகு கலப்பை, ஊடு பயிர்களில் பெருமளவு பயன்படுகிறது. இக்கலப்பையை, சிலர் சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப, உள்ளூரில் மாற்றி உள்ளூர் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இவை மிக எளிமையாக உருவாக்கக்கூடியதாகவும், குறைந்த விலையிலும் மற்றும் வேலைக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
குறைந்த இடைவெளிக் கொண்ட பயிர்களின் இடை உழவுக்கு தந்தி பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தந்தி பயன்படுத்தப்படுகிறது. கலப்பையுடன் இணைக்கப்படும் தந்திகளைப் பொருத்து அதன் வேலை அகலம் அமையும். பில்லாகுண்டக்கா கத்தியின் நீளம் 30 முதல் 45 செ.மீ வரை இருக்கும். கத்தியின் நீளம் பயிர் இடைவெளி அளவைவிட 10 செ.மீ குறைவாக இருக்கும்.

புகையிலை கத்தி பலுகு, தூலத்தைபிட தந்தி நீளமானதாகக் கொண்டுள்ளது. அதனால் (எளிதில்) உடையும் தன்மை கொண்ட இலைக்காம்புகளை பாதிக்காமல், மண் மேற்பரப்பில் உள்ள களைகளை மட்டும் எடுப்பதற்கு பயன்படுகிறது.

நட்சத்திர வடிவிலான களை எடுக்கும் கருவி ஒரு வேலையாள் மூலம் இயக்கக்கூடிய ஒரு சிறிய கருவி இக்கருவி நீண்ட செங்குத்தான மரத்தண்டு அல்லது இரும்புத் தண்டு மற்றும் சிறிய கிடைமட்டத் தண்டு (கருவியை இயக்க ஏற்றவாறு) கொண்டிருக்கும். மற்றொரு முனையில் இரு நட்சத்திர வடிவ சக்கரங்கள் மற்றும் ஒரு 10 செ.மீ அளவு ஒரு சிறிய கத்தி ஆகியவை இணைக்கப்ட்டிருக்கும். சுழலும் சக்கரத்தில் உள்ள கூர்மையான பற்கள் போன்ற அமைப்புகள் மண்ணை பண்படுத்தவும், களைகளை துண்டாக்கவும் மற்றும் நன்றாக கருவியை இயக்கவும் உதவுகிறது.

நிலக்கடலை, திணைப் போன்ற குறுகிய இடைவெளி கொண்டப் பயிர்களில் களைகளைக் கட்டுப்படுத்த இக்கருவி பயன்படுகிறது.


நில பண்படுத்துதலில் நவீன உத்திகள்

பழமையான உழவு முறை / தொன்று கால உழவு முறையில் அதிக சக்தி செலவிடப்படுகிறது. மேலும் மண் கட்டமைப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு, தாள் போர்வை உழவு (Stubble mulch tillage) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் உயர்ந்து வரும் (கச்சா) எண்ணெய் விலையினால், குறைந்த உழவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்சனைகளும் காரணம். தொடர்ந்து, அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும் மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.

நடவு செய்யப்படும் பகுதி (சால் பகுதி) மற்றும் நீர் மேலாண்மை பகுதி (கால்களுக்கு இடைப்பட்ட பகுதி) களுக்கான தேவை மாறுபட்டது. நடவு செய்யப்படும் பகுதியில் உண்டாக்கப்படும் பண்பட்ட புழுதிக்கு உதவுகிறது. சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில், இரண்டாம் உழவு செய்யப்படுவது இல்லை மற்றும் கரடு முரடான மண் கட்டமைப்பு கொண்டதாக இருப்பதால் குறைவான களை வளர்ச்சிக் கொண்டதாகவும், அதிக நீர் வடிகால் கொண்டதாகவும் இருக்கும். உழவின் முதன்மை குறிக்கோள், களைகளை கட்டுப்படுத்துவதும் ஆகும். களைகளை, களைக்கொல்லி கொண்டும் கட்டுப்படுத்தலாம்.

மட்கு மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்ட மேல் மண்ணை புரட்டுவதே முக்கிய குறிக்கோளாக, உழவு கொண்டிருந்தது. ஆனால் நவீன வேளாண் முறையில் கால்நடை மற்றம் பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவது குறைந்து விட்டதால் மேல் கூறப்பட்டது முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக தாவரக்கழிவுகள், மண் மேற்பரப்பில் பசுந்தாள் போர்வையாக இடுவதால் ஆவியாதல் மற்றும் மண் அரிப்பை கட்டுப்படுத்தும். ஆய்வின் அடிப்படையில், தொடர் உழவு பல தடவை தீமையாகவும், ஒரு சில சமயம் நன்மை பயக்கக்கூடியதாகவும் அமைகிறது. இத்தகைய காரணங்களினால் மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு மற்றும் பசுந்தாள் போர்வை இடுவது உழவு போன்ற புதிய முன்னேற்ற உழவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மிகக் குறைந்த உழவு முறை

பழமையான உழவு முறையை விட குறைந்த உழவு முறையில் ஏற்படும் மண் இடர்பாடுகள் மிகக் குறைவே. குறைந்த உழவு முறையின் முக்கியக் குறிக்கோள், ஒரு நல்ல விதைப்படுக்கை, விரைவாக விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தப் போதுமான குறைந்தபட்ச உழவே ஆகும்.

இரண்டு முறைகளில் உழவைக் குறைக்கலாம்

  1. அதிகச் செலவு குறைந்த பயன் கொண்ட செயல்களை தவிர்த்தல்
  2. வேளாண் வேலைகளை / செயல்களை ஒருங்கிணைத்து செய்தல்

குறைந்த உழவு முறையின் பயன்கள்

  • தாவர கழிவுகளின் மட்கு உரத்தினால் மண்வளமும், நன்மையும் கூடுகிறது. மேன்மை அடைகிறது.
  • அதிகத் தாவரங்கள் மற்றும் மக்கும் நிலையில் உள்ள தாவரங்களின் வேர்களினால் நீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.
  • மேம்பட்ட மண் கட்டமைப்பினால் வேர் வளர்ச்சிக்கு தடை குறைவாகவே இருக்கும்.
  • கன உழவு இயந்திரங்களின் இயக்கம் இல்லாததினால் குறைவான மண் இறுக்கமே இருக்கும் மற்றும் பழமையான உழவு முறையை விட, குறைவான மண் அரிப்பு குறைவாகவே இருக்கும்.

குறிப்பு

  • இவ்வகை நன்மைகள் பெரு மற்றம் குறு நயமிக்க மண் பதம் கொண்ட மண்ணில் இரண்டு முதல் சான்றாண்டுகள் மேல் குறைந்த உழவு முறையைக் கடைப்பிடிக்கும் போது ஏற்படும்.

குறைந்த உழவு முறையினால் ஏற்படும் தீமைகள்

  • குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும்.
  • குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும்.
  • அவரை மற்றும் பட்டாணி போன்ற பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப்படுகின்றன.
  • வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.
  • தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.

குறைந்த உழவின் வெவ்வேறு முறைகள்
பயிர் வரிசை பகுதி உழவு

  1. வளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல் உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.

கலப்பை நடவு உழவு

மண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.

டிராக்டர் சக்கர பயிர் நடவு

வழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.

பூஜ்ஜிய உழவு முறை

உழவற்ற நிலையையே பூஜ்ஜிய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ பூஜ்ஜிய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.

ஒருங்கிணைந்த உழவு நடவு முறை

பூஜ்ஜிய உழவுகளில் ஒரு முறை ஆகும் இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல் விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் (Sweep and trash) கத்திப்பகுதி சீரமைக்கிறது மற்றும் (பிளான்டர் / (Planter Shoe) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.

பூஜ்ஜிய உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.

தாள் போர்வை உழவு

பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும் இதன் மூலம் மண் இளகுகிறது தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.

தாள்போர்வை உழவில் விதைப்பதற்கான இரண்டு முறைகள்

  • ஒரு அகன்ற சுவீப் மற்றும் வெட்டுக்கத்திகள், பூஜ்ஜிய உழவில் உள்ளது போலவே பயிரிடப்படும் வரிசையை சுத்தம் செய்து, சீரமைக்கிறது. மேலும் குறுகிய நடவுக் கொழு, விதைத்தலுக்கு ஏற்றவாறு குறுகிய துளையை அமைக்க உதவுகிறது.
  • 5 முதல் 10 செ.மீ அகலம் கொண்ட குறுகிய உளிக்கலப்பை 15 முதல் 30 செ.மீ ஆழம் வரை மண்ணில் உழுது தாவரக் கழிவுகளை மண் மேற்பரப்பிலிருந்து நீக்குகிறது.
  • உளிக்கலப்பை, கடின மண் மற்றும் மண் மேற்பரப்பை நன்றாக உடைத்து உழுகிறது. தாவரக் கழிவுகளுடனே நடவு செய்வதற்கு சிறப்பு நடவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.