தமிழ்நாட்டின் மண் பிரிவுகள்
1. செம்மண் (65 சதவீதம்)
2. கரிசல் மண் (12 சதவீதம்)
3. செம்பொறை மண் (3 சதவீதம்)
4. கடற்கரை மண் (7 சதவீதம்)
செம்மண் வகைகள்
1. இரு பொறை செம்மண் (30 சதவீதம்)
2. வளம் குறைந்த செம்மண் (6 சதவீதம்)
3. மணற்பாங்கான செம்மண் (6 சதவீதம்)
4. ஆழம் குறைந்த செம்மண் (2 சதவீதம்)
5. ஆழமான இருபொறை செம்மண் (8 சதவீதம்)
தமிழ்நாட்டின் வேளாண் தடப் வேப்ப மண்டலத்தின் மண் வகைகள்
வ.எண். | மண்டலம் | மாவட்டம் | மண் வகைகள் |
1. | வடகிழக்கு மண்டலம் | செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் | மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண் |
2. | வடமேற்கு மண்டலம் | சேலம் | சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண் |
3. | மேற்கு மண்டலம் | கோவை, ஈரோடு | இருபொறை செம்மண், கரிசல் மண் |
4. | காவேரி படுகை மண் | தஞ்சை, திருச்சி | இருபொறை செம்மண், வண்டல் மண் |
5. | தெற்கு மண்டலம் | புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் | கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண் |
6. | அருக மழை மண்டலம் | திருநெல்வேலி | கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண் |
7. | மலைத்தொடர் மண்டலம் | நீலகிரி, ஆணைமலை, பரணி மலைத்தொடர், கொல்லி மலை | செம்பொறை மண் |
வளமான மண்ணின் தன்மைகள்
- செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
- வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும்
- வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.
- மண்ணின் கார் அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருப்பின் அவை வளமான மண்ணாகும்
- மண் சரியான மண் அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
- வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயிர்கள் காணப்படும்
- வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும்
Super
ReplyDelete