வரையறைகள்
- பயிரிடுவதற்கு தேவையான ஊட்டசத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும்
- மண் வளத்தின் நிலவரம் மற்றும் மண்ணின் குறைகளை தீர்க்கக்கூடிய சிறப்பு மேலாண்மை பற்றி முடிவு செய்யவேண்டும்
- ஊட்டச்சத்து ஆதாரங்களின் இருப்பு பற்றி அறியவேண்டும்
- விவசாயிகளின் பொருளாதார நிலைமை, ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பெறக்கூடிய லாபம்
- சமூக ஏற்கம் தன்மை
- சுற்றுபுறச்சூழலை கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும்
- சுற்றுப்புறத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும்
பயன்கள்
- மண்ணில் இருக்கக்கூடிய இயற்கை ஊட்டங்களை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.
- பயிரின் ஊட்டச்சத்து தேவையையும் இயற்கை மற்றும் செயற்கை ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்து அளிப்பையும் ஒருங்கிணைக்கிறது.
- பயிர்களுக்கு சமசீர் ஊட்டத்தை அளிக்கிறது.
- குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையிலிருந்து வரக்கூடிய எதர்மறை விளைவுகளைக் குறைக்கிறது
- மண்ணின் இயல், வேதியியல், உயிரியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- கார்பன் வெளியீட்டால் மண், நீர், சுற்றுப்புறசூழல் சீர்குறைவதை குறைக்கிறது
- மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்கிறது
- மேற்பரப்பு நிரீனால் இழப்பு வாயு மண்டலத்திற்கு ஆவியாகும் ஊட்டச்சத்து போன்றவற்றை குறைக்கிறது.
பகுதிகள்
மண்மூலம்
மண்ணில் எளிதில் கிடைக்கப் பெறாத ஊட்டங்களை கிடைக்குமாறு செய்கிறது. தேர்ந்தெடுத்த பயிர் ரகங்களைப் பயன்படுத்துதல், சாகுபடி முறை மற்றும் பயிர் அமைப்புத் திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
கனிம உரங்கள்
மிகப் பெரிய குருணைகள், பூசப்பட்ட யூரியா, அமில மண்ணில் எளிதில் கிடைக்கக்கூடிய ராக் பாஸ்பேட்டின் நேரடி பயன்பாடு, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (), எம்.ஒ.பி. மற்றும் நுண்னணூட்ட உரங்கள்.
அங்கக மூலங்கள்
பயிரிடுவதின் துணைப்பொருள்கள், பயிர் சம்பந்தமான தொழிற்சாலையின் துணைப் பொருள்கள். பண்ணை எரு, பறவைகளின் எச்சங்கள், பயிர் கழிவுகள், எச்சங்கள், கழிவு நீர், சாக்கடைக் கழிவு, தொழிற்சாலைக் கழிவுகள்
உயிரியல் மூலங்கள்
நுண்ணுயிரி காரணப் பொருள் மாற்றீடு 15-40 கிலோ தழைச்சத்து ஹெக்டேர்
நுண்ணுயிரி காரணப் பொருள் மாற்றீடு 15-40 கிலோ தழைச்சத்து ஹெக்டேர்
No comments:
Post a Comment