உரங்கள் என்பது இயற்கை அல்லது செயற்கை மூலங்களிலிருந்து வரக்கூடிய எந்தப் பொருளையும் மண்ணில் சேர்த்து, பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகும்.
- நேரடி உரங்கள்: ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கிறது
- கூட்டு உரங்கள்: 2 அல்லது 3 ஊட்டச்சத்துக்களை முக்கியமாக 2 முக்கிய ஊட்டங்களை வேதியியல் கலவையுடன் கொண்டது. இந்த உரங்கள் துகள்கள் வடிவத்தில் பொதுவாக உற்பத்தி செய்யப்படுகிறது
உதாரணம்: டைஅமோனியம் பாஸ்பேட், நைட்ரோபாஸ்பேட், அம்மோனியம் பாஸ்பேட்
- கலவை உரங்கள்: நேரடி உரங்களின் இயல் நிலை கலவையே கலவை உரங்களாகும். இதில் 2 அல்லது 3 முக்கிய ஊட்டச் சத்துக்கள் இருக்கும். கலவை உரங்களை நன்றாகக் கையால் அல்லது இயந்திரத்தால் கலக்க வேண்டும் உரங்களை மேலும் இயல்நிலைத் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தலாம்.
- திட உரங்கள்
- நீர்ம உரங்கள்
திட உரங்கள் பல வடிவங்களில் இருக்கும், முறையே
- பொடி (ஒற்றை சூப்பர் பாஸ்பேட்)
- படிகம் (அம்மோனியம் பாஸ்பேட்)
- சிறு கட்டிகள் (யூரியா, டைஅமோனியம் பாஸ்பேட், சூப்பர் பாஸ்பேட்)
- சிறு துகள்கள் (ஹோலாண்டு உருண்டைகள்)
- பெரிய துகள்கள் (யூரியா பெரிய துகள்கள்)
- பிரிக்யூட் (யூரியா ப்ரிக்யூட்)
யூரியா கட்டிகள் யூரியா சிறு துகள்கள் அம்மோனியம் சல்பேட்
நீர்ம உரங்கள்:
- நீர்ம உரங்கள் பாசன நீருடன் அல்லது நேரடி தெளிப்பாக அளிக்கப்படுகிறது.
- பயன்படுத்துவது எளிது, ஆட்கள் தேவை குறைவு, களைக்கொல்லிகளுடன் கலக்கும் வகையில் உள்ளது. இதனால் விவசாயிகளால் பெரிதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
தழைச்சத்து உரங்கள்:
- தழைச்சத்து பற்றாக்குறை முதன்முதலில் மண்ணில் தோன்றுகிறது மற்றும் பயிர்களும் தழைச்சத்து உரத்தை மற்ற சத்துக்களை விட அதிகளவில் எடுத்துக் கொள்கிறது. இதனால் தழைச்சத்து உரங்கள் உரங்களிலேயே முதல் இடத்தை வகிக்கிறது
- 80%க்கு மேலான உரங்கள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அவை நைட்ரஜன் உரங்களாக முக்கியமாக யூரியாவாக தயாரிக்கப்படுகின்றன
- இது பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது மற்றும் பொருளாதார உற்பத்தி கணக்கிட முடியாத வகையில் உள்ளது
தழைச்சத்து உரங்களை மேலும் பிரிக்கலாம். அவையாவன:
அம்மோனியா உரங்கள்
- அம்மோனியா உரங்கள் தழைச்சத்தை அம்மோனியம் அல்லது அம்மோனியா வடிவத்தில் வைத்திருக்கும்
- நீரில் எளிதில் கரையக்கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாக கிடைக்கப் பெறும் நிலையில் உள்ளது
- நெல்லைத் தவிர, மற்ற எல்லாப் பயிர்களும் தழைச்சத்தை நைட்ரேட் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும். இந்த உரங்கள் கரைவதால் ஏற்படும் இழப்பை எதிர் கொள்ளக் கூடியது, அம்மோனியம் அயனிகள் மண்ணில் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும் நிலையில் இருக்கும்
அம்மோனியம் சல்பேட் C(NH4)2SO4
- இது ஒரு வெள்ளை உப்பு, நீரில் நன்றாகக் கரையும். இதில் 20.6% நைட்ரஜன், 24.0% கந்தகமும் உள்ளது
- நெல் மற்றும் சணல் சாகுபடியில் இதன் பயன்பாடு நன்மை அளிக்கக் கூடியதாக உள்ளது
- பயன்படுத்துவது எளிது, உலர் நிலையில் சேமித்து வைக்கலாம். மழைக் காலத்தில் சில சமயங்களில் கட்டிகள் உண்டாகும்
- விதைப்பதற்கு முன், விதைக்கும் சமயத்தில் அல்லது மேலுரமாக பயிர்களுக்கு அளிக்க வேண்டும்
அம்மோனியம் குளோரைடு (NH4Cl)
- இது ஒரு வெள்ளை உப்பு இதில் 26.0% நைட்ரஜன் உள்ளது
- தக்காளி, புகையிலை மற்றும் சில பயிர்களுக்கு இந்த உரங்கள் தாக்கம் ஏற்படுத்துவதால் பரிந்துரைக்கப்படுவதில்லை
அன்ஹைடரஸ் அம்மோனியா (NH4 )
- நிறமற்றது மற்றும் நெடியுடையது. இதில் 82.0% நைட்ரஜன் உள்ளது
- மலிவானது மண்ணில் நேரடியாகவும், குழாய்கள் வழியாகவும் அளிக்கப்படுகின்றன
- சாதகமான தட்பவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவமாக மாறிவிடும்
நைட்ரேட் உரங்கள்:
- நைட்ரேட் வடிவத்தில் நைட்ரஜன் இதில் இருக்கும்
- நைட்ரஜன் அயன்கள் நீரில் கரைந்து ஓடிவிடும். ஏனென்றால் இந்த நைட்ரேட் அயனிகள் மிக எளிதாக மண்ணில் நகரும்
- தொடர்ந்து இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் மண்ணின் அமிலத்தன்மை குறையும். இந்த உரங்கள் அடிப்படையிலேயே மண்ணில் படியும் தன்மை கொண்டது
சோடியம் நைட்ரேட் (NaNO3)
- இது ஒரு வெள்ளை உப்பு. இதில் 15.6% தழைச்சத்து உள்ளது
- நீரில் முழுவதுமாக கரையும். பயிர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் உள்ளது. மண்ணில் எந்த விதமான வேதியியல் மாற்றமும் ஏற்படுத்தாது
- அரிப்பு ஓட்டம் மற்றும் நைட்ரஜன் குறைப்பால் எளிதாக இழப்பு ஏற்படுகிறது
- அதிகளவிலான சோடியம் நைட்ரேட் வருடா வருடம் அளிப்பதால் நைட்ரேட் அயனிகள் பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சோடியம் அயனிகள் மண்ணில் அதிகளிவில் சேர்த்து மண்ணின் அமைப்பை தாக்குகிறது. சோடியம் நைட்ரேட்டை சிலி சால்ட் பீட்டர் அல்லது கைலேன் நைட்ரேட் என்றும் அழைக்கப்படுகிறது
- சோடியம் நைட்ரேட் குறிப்பாக அமில மண்ணிற்கு பயனுள்ளதாக உள்ளது
கால்சியம் நைட்ரேட் (Ca(NO3)2:
- வெள்ளை நிறத்தில் படிக வடிவில் நீர் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும். 15.5% தழைச்சத்து, 19.5% கால்சியம் இதில் உள்ளது
- மண்ணின் கார அமிலத்தன்மை சரிசமமாக வைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது
கால்சியம் நைட்ரேட்
பொட்டாசியம் நைட்ரேட் (KNO3):
- 13.0 சதவீத நைட்ரஜன், 36.4 சதவீதம் பொட்டாசியம் இதில் உள்ளது
- சோடியம் நைட்ரேட் போலவே இயல்புகளும், பயன்களும் இதில் உள்ளது
அம்மோனியா மற்றும் நைட்ரேட் உரங்கள்
இதில் அம்மோனியா மற்றும் நைட்ரேட் உள்ளது. இந்த உரங்கள் பயிர்களால் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் (NH4NO3)
- வெள்ளை நிறத்தில் நீரில் கரைய கூடியதாக நீர் ஈர்க்கும் தன்மையுடைய உப்பு இதில் 3 சதவீத நைட்ரஜன் உள்ளது. இதில் பகுதியளவு நைட்ரேட் நைட்ரஜனாகவும், பகுதியளவு அம்மோனியம் வடிவத்திலும் உள்ளது
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் (CAN)
- பழுப்பு அல்லது சாம்பல் நிற துகள்களையுடைய உரம்
- இதில் 26% நைட்ரஜன் உள்ளது
- இது ஒரு நடுநிலை உப்பு மற்றும் இதை அமில மண்களில் கூட பாதுகாப்பாக அளிக்கலாம்
- மொத்த நைட்ரஜனில் பகுதியளவு அம்மோனியா வடிவத்திலும், பகுதியளவு நைட்ரேட் வடிவத்திலும் உள்ளது
- சுண்ணாம்பை சேர்ப்பதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
அம்மோனியம் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் சல்பேட் நைட்ரேட் ((NH4)2SO4NH4NO3)
- இதில் 26 சதவீத நைட்ரஜன் உள்ளது. பகுதியளவு அம்மோனியா வடிவத்திலும், பகுதி (6.5 சதவீதம்) நைட்ரேட் நைட்ரஜன் உள்ளது.
- அம்மோனியம் நைட்ரேட் மற்றும் அம்மோனியம் சல்பேட் கலந்த கலவையாகும்.
- வெள்ளை நிற படிக வடிவம் அல்லது அழுக்கு கலந்த வெள்ளை நிற துகள்களாக உள்ளது.
- எளிதாக நீரில் கரையும், வேகமாக செயல்படக் கூடியது.
- இதன் தரம் நன்றாக இருக்கும் எல்லா விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
- அம்மோனியம் சல்பேட்டால் மண்ணில் அமில விளைவு ஏற்படுகிறது.
- விதைப்பதற்கு முன், விதைக்கும் பொழுது அல்லது மேலுரமாக அளிக்கலாம்.
அமைடு உரங்கள்
- நீரில் நன்றாகக் கரையக் கூடியது. மண்ணில் எளிதாக சிதைவுறும்
- அமைடு வடிவத்தில் உள்ள நைட்ரஜன் எளிதாக அம்மோனியாவாகவும், நைட்ரேட் வடிவத்திலும் மண்ணில் மாறும்.
யூரியா (CO (NH2)2)
- மிக அடர்த்தியான திட உரம், இதில் 46 சதவீத நைட்ரஜன் உள்ளது.
- இது ஒரு வெள்ளை நிற படிகம். நீரில் நன்றாகக் கரையும்.
- காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் இதை ஈரம் இல்லாத கலன்களில் வைக்க வேண்டும். எளிதாக அம்மோனியாகவும், நைட்ரேட்டாகவும் மாறிவிடும்.
- மண்ணில் நைட்ரேட் அம்மோனியா வடிவத்தில் நிலைத்து நிற்கும் வடிகாலின் போது கூட இழப்பு ஏற்படாது.
- யூரியா தெளிப்பு பயிர்களால் எளிதாக எடுத்துக் கொள்ளப்படும்.
- விதைக்கும் பொழுது அல்லது மேலுரமாக அளிக்கலாம்.
- எல்லா விதமான பயிர்களுக்கும் பொருந்தும் மேலும் எல்லா விதமான மண்களுக்கும் அளிக்கலாம்.
கால்சியம் சைனமைடு (CACN2 )
- இதில் 20.6 சதவீத தழைச்சத்து உள்ளது.
- சாம்பல் கலந்த வெள்ளை நிறப் பொடி போன்ற பொருள், ஈரமான மண்ணில் சிதைவுறுவதால் அம்மோனியாவைத் தரும்.
பாஸ்பேட் உரங்கள்
- பாஸ்பேட் உரங்கள் என்பது பாஸ்பரஸை எளிதாக உறிஞ்சக் கூடிய வடிவத்தில் உள்ள வேதியியல் பொருட்களாகும்.
சூப்பர் பாஸ்பேட் (Ca(H2Po4)2):
- இது ஒரு முக்கியமான பாஸ்பேட் உரம்.
- இதில் 16 சதவீதம் P2O5 கிடைக்கும் வடிவத்தில் உள்ளது.
- அமில மண்களில், அங்கக உரங்களுடன் இணைந்து பயன்படுத்தலாம்.
- விதைப்பதற்கு முன்போ அல்லது விதைத்த பின்போ அல்லது நடவு செய்யும் போதோ பயன்படுத்த வேண்டும்.
பொட்டாஷ் உரங்கள்
- பொட்டாசியம் அயனிகள் உறிஞ்சிக் கொள்ளக் கூடிய வடிவத்தில் இருக்கும்.
- 2 விதமான பொட்டாஷ் உரங்கள் உள்ளன.
அவையாவன:
- மூரேட் பொட்டாஷ் (KCL) பொட்டாசியம் சல்போட் (K2So4 )
- நீரில் கரையக் கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாககட கிடைக்கும் வகையில் உள்ளது
பொட்டாசியம் குளோரைடு (KCL)
- இது ஒரு வெள்ளை அல்லது சிவப்பு நிற துகள்களை உடைய உரம். இதில் 60.0 சதவீத K2O உள்ளது.
- நீரில் கரையாக கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.
- மண்ணிலிருந்து உறிஞ்சிக் கொள்ளுவதால் இழப்பு ஏற்படாது.
- விதைப்பதற்கு முன் அல்லது விதைத்த பின் அல்லது அல்லது விதைக்கும் போது அளிக்க வேண்டும்.
- இதில் 47 சதவீத குளோரின் உள்ளது.
- குளோரின் இருப்பதால் புகையிலை, உருளைக்கிழங்கு மற்றும் இதர சில பயிர்களுக்கு ஏற்றதல்ல.
பொட்டாசியம் சல்பேட் (K2So4 )
- இது ஒரு வெள்ளை உப்பு. இதில் 48 சதவீத K2O உள்ளது.
- நீரில் கரையக் கூடியது பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடியது.
- மண்ணில் அமிலத் தன்மை அல்லது காரத் தன்மை ஏற்படுத்தாது.
- மண்ணில் அமிலத்தன்மை அல்லது காரத் தன்மையை ஏற்படுத்தாது.
- புகையிலை, உருளைக்கிழங்கு மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றது.
- பொட்டாசியம் குளோரைடு உடன் மெக்னீசியம் சல்பேட்டை சேர்த்து தயாரிப்பதால் இதன் விலை அதிகமாகிறது.
இரண்டாவது முக்கியமான உரங்கள்:
மெக்னீசியம் உரங்கள்
மெக்னீசியம் உரங்கள் என்பது மெக்னீசியம் அயனிகளைக் கொண்ட வேதிப் பொருளாகும்.
மெக்னீசியம் சல்பேட் (MgSO4)
பொட்டாசியம் அளிப்பு அதிகரிக்கும் போது மெக்னீசியம் உரங்களின் பயன்பாடு குறையும்.
கால்சியம் உரங்கள்
கால்சியம் உரங்கள் என்பது கால்சியம் அயனிகளை உறிஞ்சிக் கொள்ளக் கூடிய வேதிப் பொருளாகும்.
- இதில் உள்ள முக்கியமான ஆதார பொருள் சுண்ணாம்பு
கால்சியம் குளோரைடு (CaCl26H2O):
- இதில் 15 சதவீத கால்சியம் உள்ளது
- அதிகமாக நீரில் கரையக் கூடியது. இதனால் தழைத் தெளிப்பாகப் பயன்படுத்தலாம்
சல்பேட் உரங்கள்
- சல்பேட் அயனிகளை உறிஞ்சிக் கொள்ளக் கூடிய வேதிப் பொருளாகும்
- பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸில் மூன்றில் இரண்டு பங்கு அளவு சல்பேட் தேவைப்படுகிறது
- தழை, மணி, சாம்பல்சத்து உரங்களில் மிகச் சிறிய அளவாக உள்ளது
- கந்தக உரங்களை பயிர்களுக்கு அளிப்பது மிக தேவையானதாக வேளாண் உற்பத்தி முக்கியமாக அதிக கந்தகத் தேவையுள்ள பயிர்களுக்கு (உதாரணமாக கடுகு) இதன் தேவை அதிகமாகிறது
நுண்ணூட்ட உரங்கள்
- நுண்ணூட்ட உரங்களின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. ஏனென்றால் மண்ணிலிருந்து அதிகளவு அகற்றப்படுவதாலும் மண்ணில் அதிகளவு சுண்ணாம்பு அளிப்பது, தீவிர வடிகால் வசதி, அதிகளவு தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களைப் பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகமாகிறது
- ஏழு முக்கியமான உரங்கள் உள்ளன. அவை இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், குளோரின், போரான், மாலிப்டினம்
இரும்பு உரங்கள்
- நீரில் கரையக்கூடியது பயிர்களின் மீது தழைத் தெளிப்பாக அளிக்கலாம்
- பயிர்கள் இரும்பு அயனிகள் வடிவத்தில் உறிஞ்சிக் கொள்ளும். பொதுவாக பயன்படுத்தப்படும் இரும்பு உரங்கள் பின்வருமாறு:
பெரஸ் சல்பேட் (FeSO47H2O) | நீரில் கரையக்கூடியது. இதில் 20% இரும்பு உள்ளது |
செறிவூட்டப்பட்ட இரும்பு | தழைச் சத்து அளிப்புக்கு ஏற்றது |
மாங்கனீஸ் உரங்கள்
மாங்கனீஸ் சல்பேட் | நீரில் கரையக் கூடியது |
செறிவூட்டப்பட்ட மாங்கனீஸ் (Mn – DTA) | இதில் 13% மாங்கனீஸ் உள்ளது. |
துத்தநாக உரங்கள்
துத்தநாக சல்பேட் | நீரில் கரையக்கூடிய வெள்ளை உப்பு இதில் 23% துத்தநாகம் உள்ளது. தழைத் தெளிப்பாக அளிக்கலாம். இதனுடைய அமில விளைவால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் |
துத்தநாக ஆக்ஸை்டு | 70% துத்தநாகம் உள்ளது. மிதமாக நீரில் கரையக் கூடியது மெதுவாக செயல்படும் தழைத் தெளிப்பாகும் |
தாமிர உரங்கள்
தாமிர பற்றாக் குறையைப் போக்க தாமிர உரங்கள் பயன்படுகிறது.
தாமிர சல்பேட் (CuSO4 5H2O) - 25% Cu
தாமிர சல்பேட் (CuSO4 H2O) - 36% Cu
போரான் உரங்கள்
போராக்ஸ் | 11 % போரான் உள்ளது. |
போரிக் அமிலம் | இதில் 11% போரான் உள்ளது. |
மாலிப்டினம் உரங்கள்
சோடியம் மாலிப்டேட் | இதில் 40% மாலிப்டினம் உள்ளது |
அம்மோனியம் மாலிப்டேட் | இதில் 54% மாலிப்டினம் உள்ளது |
- நீரில் கரையக் கூடிய உப்பு. இதில் மாலிப்டினம் உள்ளது
- மண் அளிப்பு மற்றும் தழைத் தெளிப்புக்கு ஏற்றது
உர தர நிலை
உரங்களில் குறைந்த அளவு சதவீதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட நிலையே உரதர நிலையாகும்
- தரங்களில் உள்ள எண்கள் கோடுகளால் பிரிக்கப்பட்டு, ஒரே தொடராக இருக்கும்
உதாரணத்துக்கு, உரபையின் மேலே 28 – 28 – 0 என்ற தரம் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் 100 கிலோ உரத்தில் 28 கி தழைச்சத்து, 28 கிலோ மணித்துச்சத்து மற்றும் சாம்பல் சத்து இல்லை என்று நாம் அறிய முடியும்.
பலதரப்பட்ட தர நிலையில் உள்ள உரங்கள் இந்தியாவில் உள்ளன
அவற்றில் சில
28 – 28 – 0
20 – 20 – 0
14 – 35 – 14
17 – 17 – 17
14 – 28 – 14 மற்றும் பல
உர விகிதம்
உரக்கலவையில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்து சதவீதங்களின் விகிதமே உரவிகிதமாகும். உதாரணத்துக்கு, உர தரநிலை 12 – 6 – 6 – ல் உர விகிதம் என்பது
2 : 1 : 1.
பயிர் ஊட்டச்சத்தை வழங்குபவர்கள்
நேரடி உரங்கள் பயிர்களுக்குத் தேவையான ஊட்டங்களை உரதர நிலையில் குறிப்பிட்டுள்ளபடி வழங்குகிறது.
கட்டுப்படுத்திகள்
தரம் குறைந்த அங்ககப் பொருட்களான மக்கிய மண், நெல் உமி, நிலக்கடலை தோல்கள் மற்றும் இதர பல பொருட்கள் உரக் கலவையுடன் தயாரிப்பின் போது கலக்கப்படுவதால் நீர் ஈர்க்கும் தன்மை குறைகிறது மற்றும் மண்ணில் இயல்நிலை மேம்படுத்தப்படுகிறது.
நிரப்பிகள்
எடை கூட்டும் பொருட்களான மணல், மண், நிலக்கரிப் பொடி மற்றும் பல உரங்களுடன் கலக்கப்படுவதே நிரப்பிகள் ஆகும். இதனால் தேவைப்படக்கூடிய தரத்தில் உரக் கலவையை தயாரிக்கலாம்.
அமிலப்படிவை நடு நிலைப்படுத்துபவை
டோலமைட், சுண்ணாம்பு கல் மற்றும் பல பொருட்கள் உரக் கலவைகளுடன் கலப்பதால் தழைச்சத்து உரங்களின் அமிலப் படிவை நடு நிலைப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment