உழவும் தொழிலும் ஓங்கச் செய்வோம்
மனிதனுக்கு மிக முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, இருப்பிடம். இதில் முதலில் வருவது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்யும் உன்னதமான சேவையை செய்வது நமது விவசாயத் தோழர்கள். பல்வேறுபட்ட காரணங்களால் இன்று உழவுத்தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. உணவில்லாமல் உயிர் வாழ்வது எப்படி இயலாதோ அதேபோல் உழவன் இல்லாமல் உலகம் இல்லை. அதனால்தான் திருவள்ளுவர் உழவுத்தொழிலின் பெருமையை
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
- என்றும் உழவரின் பெருமையை
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
- என்றும் புகழ்ந்து போற்றினார்.
அப்படிப்பட்ட உழவுத்தொழிலும் உழவர்களும் படும் இன்னல்கள் எண்ணிலடங்கா. ஆகவே விவசாயத்தைக் காக்கவும், விவசாயிகளுக்கு உதவி செய்யவும் என்னாலான ஒரு சிறு முயற்சி இது. இந்த வலைப்பூவில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் இடம் பெறும். மேலும் சிறுதொழில்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளும் இடம்பெற உள்ளன.
விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் இந்த வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். தங்களது மேலான ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்,
நல்லு லிங்கம்.