Showing posts with label மண் பரிசோதனை. Show all posts
Showing posts with label மண் பரிசோதனை. Show all posts

Wednesday, December 7, 2011

மண் பரிசோதனை பற்றிய முழு விபரங்கள்


மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்

1. இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்.
2. பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
3. மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
4. மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்.
5. மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்.
6. பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்.
7. தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை
மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்

  • மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
  • அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்

மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்

  • நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
  • உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
  • பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

  • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

  • மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

  • இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.

  • நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
  • பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.


கால் குறைப்பு(Quartering)

  • வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 12 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

X





X




X

X



  • சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.


பயிர் வகை

மண் மாதிரி எடுக்கும் ஆழம்

(அங்குலத்தில)

(செ.மீ.)

1.

புல் மற்றும் புல் வெளி

2

6


9


12,24,36 அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்

5

2.

நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்)


15

3.

பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்)


22

4.

நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள்

30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்

Soil Sampling

Soil Sampling

Soil Sampling

Soil Sampling

Soil Sampling

Soil Sampling

Soil Sampling


மண் பரிசோதனை குறிப்புகளின் வரையளவு அட்டவணை

ஊட்டப் பொருள் குறைந்த நடுத்தரம் அதிகம்
அங்கக கரிமம் < 0.5% 0.5-7.5% > 0.75%
இருக்கக்கூடிய தழைச்சத்து (N) < 240 கி.கி/ஹெக் 240-480 கி.கி/ஹெக் > 480 கி.கி/ஹெக்
இருக்கக்கூடிய மணிச்சத்து(P) < 11.0 கி.கி/ஹெக் 11-22 கி.கி/ஹெக் > 22 கி.கி/ஹெக்
இருக்கக்கூடிய சாம்பல்சத்து (K) < 110 கி.கி/ஹெக் 110-280 கி.கி/ஹெக் >280 கி.கி/ஹெக்

மண் வகைகள் காரநிலை
அமிலங்கள் <6.0
சாதாரண நிலையிலிருந்து உப்புத்தண்ணீர் 6.0-8.5
காரத்தன்மையாக மாற்ற வேண்டும் 8.9-9.0
காரத்தன்மை >9.0

மொத்த தின்மக் கரைபொருள் (கடத்தும் ஆற்றல் மில்லி எம்ஹெச்ஒஸ் /செ.மீ2)

<1 சாதாரணமாக
1-2 முளைப்பிற்கு திறனாய்வு
2-4 பயிர்களின் வளர்ச்சிக்கு திறனாய்வு செய்தல்
>4 நிறைய பயிர்களுக்கு சேதாரம்